அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் உடல்நிலை குறித்து வெள்ளை மாளிகை மருத்துவர் சீன் கான்லி கூறுகையில், “அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு இரண்டாவது முறையாக கோவிட்-19 பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவ சோதனை முடிவுகள் 15 நிமிடங்களில் அறிவிக்கப்பட்டன. அவருக்கு கோவிட்-19 பாதிப்பு இல்லை. ட்ரம்ப் நலமுடன் உள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சமீபத்தில் ஐரோப்பிய தலைவர்களை சந்தித்தார். அவர்களுடன் வந்திருந்த அலுவலர்கள் சிலருக்கு கரோனா தொற்று அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன. இதையடுத்து ட்ரம்ப்புக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
இதில் அவருக்கு கரோனா தொற்று இல்லை என்று அறியப்பட்டது. தொடர்ச்சியாக அவருக்கு இரண்டாவது முறையாக கரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகளின்படி, கரோனாவினால் 175 க்கும் மேற்பட்ட நாடுகளிலுள்ள பத்து லட்சத்து 12 ஆயிரத்து 159க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் பாதிப்பு இரண்டு லட்சத்து 36 ஆயிரத்து 339 ஆக உள்ளது. இந்நிலையில் அடுத்த இரு வாரங்கள் மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் சமூக இடைவெளியை கடைப்பிடித்தலை எக்காரணம் கொண்டும் மீறக் கூடாது எனவும் அந்நாட்டு மக்களை ட்ரம்ப் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: 'உலகப் போர்களின்போது சந்தித்ததைவிட மோசமான நெருக்கடியை உலகம் சந்திக்கும்'