ETV Bharat / international

கரோனா - குடியேற்றத்திற்கு தடை விதித்த ட்ரம்ப்! - அமெரிக்கா குடியேற்றம்

வாஷிங்டன்: கோவிட்-19 தொற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில், அமெரிக்காவில் வெளிநாட்டினர்களின் குடியேற்றத்திற்கு 60 நாள்கள் அதிபர் ட்ரம்ப் தடை வித்துள்ளார்.

Trump
Trump
author img

By

Published : Apr 23, 2020, 12:52 PM IST

உலகளவில் கோவிட்-19 தொற்றால் உலக வல்லரசாகக் கருதப்படும் அமெரிக்காவைவிட வேறெந்த நாடும் அதிகம் பாதிக்கப்படவில்லை. அமெரிக்காவில் இதுவரை சுமார் 8.50 லட்சம் பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 47 ஆயிரத்து 659 பேர் உயிரிழந்தனர்.

பெரும்பாலான தொழில்துறைகள் இந்த வைரஸ் தொற்றால் முற்றிலும் முடங்கியுள்ளன. இதன் காரணமாக லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் வேலையிழந்துள்ளனர். இந்நிலையில், அமெரிக்காவிற்கு வேலைவாய்ப்பை நோக்கி சட்டப்பூர்வமாகக் குடியேற விரும்புபவர்களுக்கு அடுத்த 60 நாள்கள் தடை விதிக்கும் உத்தரவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

இந்த உத்தரவு குறித்து வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அதிபர் ட்ரம்ப் கூறுகையில், "இது மிகவும் வலிமையான ஒரு உத்தரவு. இதன் மூலம் பொருளாதாரம் மீண்டும் செயல்படத் தொடங்கும்போது அமெரிக்கர்களுக்கு வேலை கிடைப்பது உறுதி செய்யப்படும்.

வைரஸ் தொற்று காரணமாக வேலையிழக்கும் அமெரிக்கர்களின் வேலையை வெளிநாட்டவர்களுக்குத் தருவது என்பது பெரும் அநீதி" என்றார்.

இந்த உத்தரவிலிருந்து அமெரிக்காவில் இருப்பவர்களுக்கு முன்பே விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்கர்களின் வாழ்க்கைத் துணைகளுக்கும் தத்தெடுக்கப்பட்டவர்களுக்கும் இந்த உத்தரவிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரப் பணியாளர்களுக்கும் முதலீட்டு பிரிவின் கீழ் சட்டப்பூர்வமாக நிரந்தர குடிமக்களாக அமெரிக்காவிற்குள் நுழைய முயல்பவர்களுக்கும் இந்த உத்தரவிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு 60 நாள்கள் அமலில் இருக்கும் என்றும் அதன்பின் நிலைமை குறித்து ஆராய்ந்து உத்தரவை நீட்டிப்பது பற்றி முடிவெடுக்கப்படும் என்றும் வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சீனாவின் பரப்புரை கருவியாகும் உலக சுகாதார அமைப்பு?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.