ETV Bharat / international

குடியேற்றத்திற்குத் தடை - அமெரிக்க அதிபர் அறிவிப்பு - Trump latest tweet

வாஷிங்டன்: அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பை உறுதி செய்யும் வகையில் குடியேற்றத்திற்கு தற்காலிகமாகத் தடை விதிக்கவுள்ளதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Trump
Trump
author img

By

Published : Apr 21, 2020, 12:38 PM IST

Updated : Apr 21, 2020, 1:47 PM IST

கோவிட்-19 தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா இருக்கிறது. உலக வல்லரசாகக் கருதப்படும் அமெரிக்காவில் இதுவரை சுமார் 8 லட்சம் பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 42 ஆயிரத்து 518 பேர் உயிரிழந்துவிட்டனர்.

இந்த வைரஸ் தொற்றால் அனைத்து தொழில்துறையும் முற்றிலும் முடங்கியுள்ளதால் லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் வேலையிழந்துள்ளனர். இந்நிலையில், அமெரிக்கர்களின் நலனைக் கருத்தில்கொண்டு வெளிநாட்டினர் குடியேற்றத்திற்கு தற்காலிகமாக தடை விதிக்கவுள்ளதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கண்ணுக்குத் தெரியாத எதிரியின் இந்த தாக்குதலிலிருந்து அமெரிக்க மக்களின் வேலைவாய்ப்பை நாம் உறுதி செய்ய வேண்டும். இதனால் அமெரிக்காவில் வெளிநாட்டினர் குடியேற்றத்திற்கு தற்காலிகமாகத் தடை விதிக்கும் உத்தரவில் கையெழுத்திடவுள்ளேன்" என்று பதிவிட்டுள்ளார்.

  • In light of the attack from the Invisible Enemy, as well as the need to protect the jobs of our GREAT American Citizens, I will be signing an Executive Order to temporarily suspend immigration into the United States!

    — Donald J. Trump (@realDonaldTrump) April 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இது எந்த மாதிரியான உத்தரவாக இருக்கும் என்பது குறித்த மற்ற தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்திய மென்பொருள் ஊழியர்கள் பெரும்பாலும் H-1B விசா மூலமே அமெரிக்கா செல்வார்கள். ஆனால் இந்த H-1B விசா என்பது குடியேற்றத்திற்கான விசா அல்ல என்பதால் ட்ரம்ப்பின் இந்த உத்தரவால் இந்தியர்கள் பாதிக்கப்படமாட்டார்கள்.

இருப்பினும், அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்ய விசாக்களுக்கு தடைவிதிக்கப்படும் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளதால் விரைவில் H-1B விசாவுக்கு தடை விதிக்கப்படலாம் என்று அஞ்சப்படுகிறது.

இதையும் படிங்க: செய்தியாளர்களுக்கு கரோனா என்பது வருத்தமளிக்கிறது - மத்திய அரசு

Last Updated : Apr 21, 2020, 1:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.