அமெரிக்காவில் உள்ள மினியாபோலிஸ் நகரில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் (49) என்ற கறுப்பினத்தவர், அந்நகர காவல் துறையினரால் கொல்லப்பட்டார். இச்சம்பவம் அமெரிக்க மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்ஜ் ஃப்ளாய்டின் உயிரிழப்புக்கு நீதி கோரி, கறுப்பின அமெரிக்கர்கள் மீதான வெள்ளை இனவெறிக்கு எதிராகக் கண்டன குரல் எழுப்பியவாறு, அந்நாடு முழுவதும் நூற்றுக்கணக்கானோர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவிட்-19 பெருந்தொற்று தாக்கத்தை நீர்த்துப்போகச் செய்யும் அளவிற்கு, இந்த போராட்டம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. வெள்ளை மாளிகைக்கு முன்பாகமும் நடந்தவரும் போராட்டம், அதிபர் ட்ரம்ப்பை எரிச்சலூட்டியுள்ளது. உள்ளூர் பயங்கரவாதிகள் அமைதியான இந்த போராட்டத்தைத் தீமுட்டி வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், "நம் தலைநகரை (வாஷிங்டன் டிசி) பாதுகாக்க அதிரடி நடவடிக்கை மேற்கொள்ள உள்ளேன். நாம் பேசிக்கொண்டிருக்கும் இந்த வேளையில், கலவரத்தை விரைந்து ஒடுக்க ராணுவத்தைக் களமிறக்கவுள்ளேன். கலவரம், சூறையாடலை முடிவுக்குக் கொண்டுவரத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறேன்.
சட்டத்தை மதிக்கும் அமெரிக்கர்களைப் பாதுகாக்க முயல்கிறேன். ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்படும். அப்பாவிய உயிர்கள், சொத்துக்களுக்கு அச்சுறல் ஏற்படுத்துவோரைக் கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர். கலவரத்தைக் கட்டுப்படுத்த மேயர்கள், ஆளுநர்கள் பலத்த பாதுகாப்பு போட வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க : அமெரிக்காவுடன் பணியாற்ற விரும்புகிறோம் - உலக சுகாதார அமைப்பு