அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் நவம்பர் 3ஆம் தேதி நடைபெறவுள்ளது. அமெரிக்க அரசியல் சட்டத்தின்படி, அங்கு அதிபர் பதவிக்காலம் நான்கு ஆண்டுகளாக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. நான்கு ஆண்டு காலம் அதிபராக பதவி வகித்தவர் மேலும் ஒரு முறை தேர்தலில் போட்டியிடலாம். மொத்தம் இரு முறை மட்டுமே (எட்டு ஆண்டுகள்) அமெரிக்காவில் ஒருவர் அதிபராக பதவி வகிக்க முடியும்.
அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் கடந்த 2016ஆம் ஆண்டு பொறுப்பேற்ற நிலையில், அவரது நான்காண்டு பதவிக் காலம் இந்த ஆண்டு இறுதியில் முடிவடைகிறது. இதையடுத்து, குடியரசுக் கட்சி வேட்பாளராக அதிபர் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். தேர்தல் பரப்புரையில் ட்ரம்ப் தற்போது தீவிரமாக ஈடுபட்டுவரும் நிலையில், அவரை முறைப்படி வேட்பாளராக குடியரசுக் கட்சி விரைவில் அறிவிக்கவுள்ளது.
அதற்கான நன்றியுரையை வெள்ளை மாளிகையிலிருந்து காணொலி மூலம் தான் ஆற்றவுள்ளதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ட்ரம்பை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிடுகிறார். துணை அதிபர் பதவிக்கு ஜனநாயகக் கட்சி வேட்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'இது எங்க லிஸ்ட்லயே இல்ல' - ரஷ்யாவின் கரோனா தடுப்பு மருந்து குறித்து உலக சுகாதார அமைப்பு