ETV Bharat / international

'தலிபான்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளோம்' ட்ரம்ப் - தலிபான்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை அமெரிக் அதிபர் ட்ரம்ப்

வாஷிங்டன்: தலிபான் பயங்கரவாதிகளுடன் மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

TRUMP
author img

By

Published : Nov 23, 2019, 1:56 PM IST

ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப் போரை நிறுத்துவது குறித்து அமெரிக்கா-தலிபான்கள் இடையே பல கட்டங்களாக அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

இதன்விளைவாக, தலிபான்களுடன் அமைதி ஒப்பந்தம் ஒன்றை எட்டியதாக ஆப்கானிஸ்தானுக்காக அமெரிக்க சிறப்புத் தூதர் சல்மே கலில்சாத் செப்டம்பரில் அறிவித்தார்.

இந்த ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டால் செயல்பாட்டிற்கு வரும் நிலையிலிருந்தது. இச்சூழலில், காபூலின் சாஷ் தரக் பகுதியில் தலிபான்கள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் அமெரிக்கப் படையைச் சேர்ந்த ஒருவர் உள்பட 12 பேர் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து, தாலிபான்களை தான் நேரில் சந்தித்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தவிருந்ததாகவும், ஆனால் காபூல் தாக்குதலைத் தொடர்ந்து அதனை ரத்து செய்துவிட்டதாகவும் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் அதிரடியாக அறிவித்தார்.

இந்நிலையில், கிடப்பில் போடப்பட்டிருந்த அமைதிப் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியுள்ளதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய ட்ரம்ப், " தலிபான்களுடன் அமைதி ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம். அடுத்த என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்" எனக்கூறினார்.

சில நாட்களுக்கு முன்பு தலிபான் பிடியிலிருந்த அமெரிக்க, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இரண்டு பேராசிரியர்கள் கைதிகள் பரிமாற்று முறையில் விடுவிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அதிபர் ட்ரம்ப் இவ்வாறு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கனடா அமைச்சரவையில் தமிழச்சி!

Intro:Body:

trump - taliban talk 

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.