அமெரிக்காவின் மூத்த செய்தியாளரும் எழுத்தாளருமான பாப் வுட்வேர்ட், ரேஜ்(Rage) என்ற பெயரில் புதிய புத்தகம் ஒன்றை செப்டம்பர் 15ஆம் தேதி வெளியிடவுள்ளார். அதற்கு முன்னர் அந்தப் புத்தகத்தின் முக்கிய பகுதிகள் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளன.
அதில், சௌதி அரேபிய செய்தியாளர் ஜமால் கஷோகியின் கொலை குறித்து சர்ச்சைக்குரிய அதிர்ச்சித் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. சௌதி அரேபிய அரசை தொடர்ச்சியாக விமர்சித்து எழுதிய செய்தியாளர் ஜமால் கஷோகி துருக்கியில் உள்ள அந்நாட்டு தூதரகத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கொலை செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவத்தில் சௌதி அரேபிய மன்னரான முகமது பின் சல்மானுக்கு தொடர்புடையாதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக முகமது பின் சல்மானுக்கு சர்வதேச சமூகம் பெரும் அழுத்தம் அளித்துவந்த சூழலில், அப்போது அவரை நான்தான் காப்பாற்றினேன் என ஆங்கிலத்தில் சர்ச்சைக்குரிய வார்த்தைகளை பயன்படுத்தி ட்ரம்ப் தன்னிடம் கூறியதாக வுட்வேர்ட் அவரது புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தப் புத்தகம் முழுமையாக வெளியானதும் அமெரிக்க அரசியல் மட்டுமல்லாது சர்வதேச அரசியலிலும் பெரும் புயலைக் கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா, சீனா தலையீடு - அடித்துக்கூறும் மைக்ரோசாஃப்ட்