ETV Bharat / international

ட்ரம்ப்பின் சர்ச்சையான கருத்து... பதிவை நீக்கிய ட்விட்டர்! - டிரம்ப் பதிவு

வாஷிங்டன்: அமெரிக்க தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவரும் நிலையில், முடிவுகளை மாற்ற ஜனநாயக கட்சி சதி செய்ய முயற்சிப்பதாக ட்ரம்ப் குற்றம்சாட்டிய பதிவை ட்விட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது.

ட்ரம்ப்
ட்ரம்ப்
author img

By

Published : Nov 4, 2020, 1:49 PM IST

அமெரிக்காவில் நவம்பர் 3ஆம் தேதி (நேற்று) அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் ட்ரம்ப் மீண்டும் போட்டியிட்டுள்ளார். அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் களமிறங்கியுள்ளார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவரும் நிலையில், முடிவுகளை மாற்ற ஜனநாயகக்கட்சி சதி செய்ய முயற்சிப்பதாக ட்ரம்ப் சர்ச்சை கருத்து தெரிவித்தார். இது விதி மீறல் எனக் கூறி, அந்தப் பதிவை ட்விட்டர் நீக்கியுள்ளது.

ட்ரம்ப்பின் அந்தப் பதிவில், "பெரிய வெற்றியை நோக்கியுள்ளோம். ஆனால், முடிவுகளை மாற்ற ஜனநாயக கட்சி சதி செய்ய முயற்சிக்கிறது. இம்மாதிரியான வேலைகளில் அவர்கள் ஈடுபடுவதிலிருந்து தடுத்து நிறுத்துவோம். வாக்குப்பதிவு நிறைவடைந்த பிறகு, வாக்குகள் செலுத்தக் கூடாது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது சர்ச்சையான பதிவு என்றும்; தேர்தல் குறித்து தவறான தகவல் பகிரப்பட்டுள்ளது எனவும் கூறி ட்விட்டர் நிறுவனம் அதனை நீக்கியுள்ளது.

  • We are up BIG, but they are trying to STEAL the Election. We will never let them do it. Votes cannot be cast after the Polls are closed!

    — Donald J. Trump (@realDonaldTrump) November 4, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

முன்னதாக, Polls என்பதற்கு பதில் poles என ட்ரம்ப் பதிவிட்டிருந்தார். அதனை நீக்கி சரியான ஸ்பெல்லிங்கை ட்ரம்ப் பதிவிட்டார். டெலாவேர் மாகாணத்தில் உரையாற்றிய ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் பிடன், "நம்பிக்கையுடன் இருங்கள். நாம் இத்தேர்தலில் வெற்றி பெறவுள்ளோம். ஆனால், பொறுமையாக இருக்க வேண்டும். இறுதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கும்வரை பொறுமையாக இருக்க வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: இறுதிக்கட்டத்தில் அமெரிக்க தேர்தல்: முக்கிய மாகாணங்களை கைப்பற்றிய ட்ரம்ப்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.