ETV Bharat / international

முற்றும் ஒபாமா - ட்ரம்ப் வார்த்தைப் போர்!

author img

By

Published : May 18, 2020, 11:52 AM IST

வாஷிங்டன்: அமெரிக்காவில் கரோனா பாதிப்பு தொடர்பாக அதிபர் டொனால்டு ட்ரம்ப், முன்னாள் அதிபர் ஒபாமா இடையே வார்த்தைப் போர் தீவிரமடைந்து வருகிறது.

trump
trump

அமெரிக்காவில் கரோனா பாதிப்பை எதிர்கொள்வது தொடர்பாக தற்போதைய அரசுக்கும், முன்னாள் அதிபர் ஒபாமாவுக்குமிடையே வார்த்தைப்போர் நிலவிவருகிறது. கரோனா வைரஸ் உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதன் தாக்கமானது அமெரிக்காவில் அதிதீவிரமாக உள்ளது. உலகிலேயே அதிக பாதிப்பு கொண்ட நாடாகவும், அதிக கரோனா உயிரிழப்பு கொண்ட நாடாகவும் அமெரிக்கா இருக்கிறது.

இந்தச் சூழலுக்கு முன்தைய ஒபாமா அரசின் பொறுப்பின்மையே காரணம் என அதிபரின் வெள்ளை மாளிகை பகிரங்கமாகக் குற்றம்சாட்டியது. இதையடுத்து இதற்குப் பதில் கூறிய ஒபாமா, நாட்டின் தலைமையில் இருக்கும் அதிபர் பொறுப்பில் இருப்பவர்கள் செயல்படுவதாகத் தெரியவில்லை எனவும், அவர்கள் பெயரளவிலேயே பொறுப்பிலிருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

இதற்கு ட்ரம்ப், ”எனது அரசைக் குறைகூறுவதற்கு ஒபாமாவுக்குத் தகுதியில்லை. ஒபாமா தான் பதவி வகித்த எட்டாண்டுகளில் திறனற்ற ஆட்சியை நடத்தியவர்” எனப் பதிலடி கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: அரசு அறிவித்த ரூ.20 லட்சம் கோடியின் முழு விவரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.