அமெரிக்காவில் கரோனா பாதிப்பு மிக மோசமாக உள்ள நிலையில், இந்த வைரஸ் பரவல் விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பின் செயல்பாட்டை அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொடர்ச்சியாக விமர்சித்துவந்தார்.
குறிப்பாக உலக சுகாதார அமைப்பின் வைரஸ் பாதிப்பின் தொடக்கப்புள்ளியான சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக குற்றம்சாட்டினார்.
உலக சுகாதர அமைப்பானது உலக நாடுகளின் நிதி மூலம் இயங்கிவரும் அமைப்பாகும். அந்த அமைப்பிற்கு அதிகம் நிதி வழங்கும் நாடாக அமெரிக்கா திகழ்ந்துவரும் நிலையில், தற்போது அந்த அமைப்பிற்கு இனி நிதி கிடையாது என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
உலக சுகாதார அமைப்பு நிதிகளை முறையாக பயன்படுத்தாமல் கரோனா பாதிப்பு தொடர்பான தகவல்களை மூடி மறைத்துள்ளது என குற்றச்சாட்டை முன்வைத்து ட்ரம்ப் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
அமெரிக்காவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில், நோய் பாதிப்பின் காரணமாக 26 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.
நேற்று (ஏப்ரல் 14) ஒரே நாளில் மட்டும் அந்நாட்டில் அதிகபட்சமாக 2,200 பேருக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கோவிட்-19: அமெரிக்காவில் விஷம் போல் பரவ என்ன காரணம்?