ETV Bharat / international

சமூக விலகல்: அமெரிக்காவில் ஏப்ரல் 30ஆம் தேதிவரை நீட்டிப்பு - அமெரிக்காவில் ஏப்ரல் 30ஆம் தேதி வரை நீட்டிப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் இரண்டு வாரங்களில் மேலும் பலமடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளதால், சமூக விலகலை ஏப்ரல் 30ஆம் தேதிவரை நீட்டிப்பதாக அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Trump extends national social distancing

author img

By

Published : Mar 30, 2020, 10:19 AM IST

கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் அமெரிக்காவில் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. உலகளவில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது.

மேலும் அமெரிக்காவில் கரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 484 ஆக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டேசெல்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

இதுவரை ஒரு லட்சத்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் 10 லட்சம் பேர் பாதிக்கப்படலாம். இதில் ஒரு லட்சம் முதல் இரண்டு லட்சம் பேர் வரை உயிரிழக்கக்கூடும் எனவும் இரண்டு லட்சம்வரை உயிரிழந்தாலே அது குறைவான இழப்புதான் எனவும் அவர் கூறிவுள்ளார்.

இதையும் படிங்க: கரோனா ஏற்படுத்திய பொருளாதார சரிவு: ஜெர்மனி நிதியமைச்சர் தற்கொலை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.