ஏமனில் அமெரிக்க வீரர்கள் நடத்திய தாக்குதலில் காஸிம் அல் ரிமி மற்றும் அய்மன் அல் ஹவகரி ஆகியோர் கொல்லப்பட்டனர். இவர்கள் அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் ஏமன் பகுதி தலைவராகவும், துணை தலைவராகவும் இருந்தவர்கள்.
இதுமட்டுமின்றி அரேபியன் பெனிசுலா என்ற இயக்கத்தையும் நடத்திவந்தனர். இந்த இயக்கத்தின் மீது பயங்கரவாத குற்றச்சாட்டுகள் உள்ளன.
இந்நிலையில் இருவரும் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். இதனை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா நடத்திய வான்வெளி தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர் ஒருவர் கொல்லப்பட்டார் என்பது நினைவுகூரத்தக்கது.
இதையும் படிங்க : பின்லேடன் மகன் கொல்லப்பட்டார் - ட்ரம்ப் அறிவிப்பு