கரோனா விவகாரம் தொடர்பாக, அமெரிக்க - சீன நாடுகளுக்கு இடையே பதற்றமான நிலைமை நீடிக்கிறது. கரோனா வைரஸின் பிறப்பிடமாக சீனா இருந்தாலும்; அதன் மையப் பகுதியாக அமெரிக்கா மாறியுள்ளது.
இதன் விளைவாக அமெரிக்காவில் இருந்து சீனாவிற்கு விமானங்கள் நுழைய, சீன அரசு தற்காலிகமாகத் தடை விதித்துள்ளது. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, சீன விமானங்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு, அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
இந்த நடவடிக்கை வரும் ஜுன் 14ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அமெரிக்காவில் இருந்து சீனாவிற்கும் சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கும் பயணிகளின் விமான சேவை முடங்கியுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான விமான சேவை ஒப்பந்தத்தில், சீன அரசு எல்லை மீறியதாக அமெரிக்காவின் போக்குவரத்துத்துறை குற்றம்சாட்டியுள்ளது.