கனடாவைச் சேர்ந்த மைக்கேல் கோவ்ரிக் (Michael Kovrig), மைக்கேல் ஸ்பாவோர் (Michael Spavor) ஆகியோர் சீனாவை உளவு பார்த்தாக அந்நாட்டு அரசு அவர்களைக் கைதுசெய்துள்ளது.
இதனால் கடும் அதிருப்தி அடைந்த கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், ஹுவாவே தலைமை வர்த்தக அலுவலர் மெங் வாங்ஜோ கனடாவில் கைதுசெய்யப்பட்டுள்ளதை மனத்தில் வைத்தே சீன இப்படிச் செய்துள்ளதாகக் குற்றம்சாட்டினார்.
ட்ரூடோவின் இந்தக் குற்றச்சாட்டை அடியோடு மறுத்த சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியான், "கனடாவில் மெங் வாங்ஜோ கைதுசெய்யப்பட்டதற்கும், கனடியர்கள் கைதிசெய்யப்பட்டதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
சீனாவின் இறையாண்மையை மதித்து, கனடிய தலைவர் இதுபோன்ற பொறுப்பற்றாமல் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்" என வலியுறுத்தியிருந்தார்.
ஆனால், இந்த விவகராம் குறித்து அமைதி காக்க மறுத்த ஜஸ்டின் ட்ரூடோ, "கனடியர்கள் கைதுசெய்யப்பட்டதன் பின்னணியில் சீன அரசியல் உள்நோக்கம் உள்ளது என்பது அனைவரும் அறிந்த உண்மையே. சரியான காரணமில்லாமல் கைதுசெய்வது சட்டவிதிகளுக்குப் புறம்பானது. கைதுசெய்யப்பட்ட கனடியர்களை சீனா உடனடியாக விடுவிக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடையை மீறியதாக ஹுவாவே நிறுவனத்தின் தலைமை வர்த்தக அலுவலர் மெங் வாங்ஜோ மீது அமெரிக்கா அளித்த புகாரின் அடிப்படையில், அவர் கனடாவில் 2018ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்டார். அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்துவது தொடர்பான வழக்கு கனட நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.
இது கனடா-சீனா இடையேயான நல்லுறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : இந்தியாவைத் தொடர்ந்து ஜப்பானுடன் மோதும் சீனா!