வாஷிங்டன்: மாகாண, கூட்டாட்சி அலுவலர்கள் மற்றும் தேர்தல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அனைத்தும், 2020 நவம்பர் 3ஆம் தேதி நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தல்தான் அமெரிக்க வரலாற்றிலேயே பாதுகாப்பான முறையில் நடைபெற்ற தேர்தல் என்கின்றனர்.
சைபர் பாதுகாப்பு அமைப்பு பத்திரிகையாளர்களுக்கு அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எந்த ஆதாரமுமின்றி இந்தத் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றஞ்சாட்டிவருகிறார். ஆனால், இந்தத் தேர்தல்தான் அமெரிக்க வரலாற்றிலேயே பாதுகாப்பாக நடைபெற்ற தேர்தல் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்த பயன்படுத்தப்படும் உபகரணங்களைத் தயாரித்த நிறுவனத்தினர் மற்றும் அமெரிக்க தேர்தலை நடத்த முக்கிய பங்களிப்பை செலுத்திய அலுவலர்களும் இந்தத் தேர்தல்தான் அமெரிக்க வரலாற்றிலேயே பாதுகாப்பான தேர்தல் என்கின்றனர்.