வாஷிங்டன் (அமெரிக்கா): அமெரிக்காவில் உளவுத்துறையில் பணியாற்றும் 20 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட அலுவலர்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை எனும் தகவல் வெளியாகியுள்ளது.
அனைவரும் கரோனா தடுப்பூசி கட்டாயம் செலுத்திக்கொள்ள வேண்டும் என அதிபர் ஜோ பைடன் அரசு ஆணையிட்டுள்ளது. இதனை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, அமெரிக்க அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் மிக முக்கியத் துறையான உளவுத்துறையின் 20 விழுக்காட்டிற்கும் மேலான அலுவலர்கள் தற்போது வரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
அதிபர் ஜோ பைடனின் கட்டளையை ஏற்க பல அலுவலர்கள் சுணக்கம் காட்டி வருகின்றனர். எனவே, தடுப்பூசி செலுத்தாத அலுவலர்களை பணியிடை நீக்கம் செய்ய பைடன் அரசு முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால், உளவுத்துறை பதவிகளை பொறுத்தவரை, அனைவரும் பல கட்ட பயிற்சிகளை பெற்று தேர்ந்த அலுவலர்களாக இருப்பர். இவர்களை இடைநீக்கம் செய்துவிட்டு புதிய அலுவலர்களை தேர்ந்தெடுப்பதிலும் அரசுக்கு பெரும் சிரமம் ஏற்படும். இதன் காரணமாக உளவுத்துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 50 ஆண்டுகளுக்கு மேல் தீபாவளி கொண்டாட்டம் இல்லாத கிராமங்கள்