ETV Bharat / international

வாஷிங்டனில் பெண்ணியவாதிகள் பேரணி! - அமெரிக்க செய்திகள்

பெண்கள் தங்கள் உரிமைகளை வலியுறுத்தி வெள்ளை மாளிகை அருகே நடத்திய போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

rally in Washington
rally in Washington
author img

By

Published : Jan 19, 2020, 7:59 PM IST

பெண்களுக்கான உரிமைகளை வலியுறுத்தியும் டிரம்ப்பின் கொள்கைகளுக்கு எதிராகவும் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் போராட்டம் நடத்தப்பட்டது. வெள்ளை மாளிகைக்கு அருகே நடைபெற்ற இந்தப் பேரணியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

இந்தப் பேரணி அமைப்பாளர் கூறுகையில், "வன்முறையற்ற எதிர்ப்பை வெளிப்படுத்தி சுயநிர்ணய உரிமை, கண்ணியம், மரியாதை ஆகியவற்றை பெண்களுக்குத் தரும் ஆதிக்கமில்லாத சமூகத்தை உருவாக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்" என்று கூறினார்

இந்தப் பேரணியில் சிலி நாட்டைச் சேர்ந்த பெண்கள் குழுவும் தங்கள் பாடல்களைப் பாடினர். இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர் கூறுகையில், "இன்று நாங்கள் வெறுப்பை வெளிப்படுத்தவில்லை; அன்பை வெளிப்படுத்துகிறோம். பெண்கள்தான் இந்த நாட்டின் ஆன்மா. அன்பு எப்போதும் வெறுப்புணர்வை வெல்லும்" என்றார்.

பேரணியில் பங்கேற்ற மார்டீன் லூதர் கிங் ஜூனியரின் மகன் மார்டீன் லூதர் கிங் III, "வரும் திங்களன்று மார்டீன் லூதர் கிங் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்தச் சூழலில் நாம் குரலற்றவர்களின் குரலாக இருக்க வேண்டும். பெண்கள் ஒன்றிணைந்தால் நாட்டிலும் உலகிலும் நிச்சயம் மாற்றங்கள் நிகழும்" என்றார்.

வாஷிங்டனில் பெண்ணியவாதிகள் பேரணி!

பெண்களின் உரிமைக்காக நடத்தப்பட்ட இந்தப் பேரணியில், அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு எதிரான பதாகைகளுடனும் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். இந்தப் பேரணியின்போது வன்முறை ஏற்படாமல் இருக்க ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

இதையும் படிங்க: 'வார்த்தைகளில் கவனம் தேவை' - ஈரான் தலைவருக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.