அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் அமைந்துள்ளது அடிசன் முனிசிபல் விமான நிலையம்.
இந்நிலையில், பீச்கிராப்ட் கிங் 350 என்ற சிறிய ரக தனியார் விமானம் இங்கிருந்து நேற்று (உள்ளூர் நேரம்) புறப்பட்டது.
அப்போது, எதிர்பாராதவிதமாக விமான நிலைய கட்டடத்தில் சிக்கிய விமானம், தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளானது.
இதில், விமானத்தில் பயணித்த பத்து பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை தொடங்கியுள்ளது.