ETV Bharat / international

இம்ரான்கான் சென்ற விமானத்தில் கோளாறு - அவசரமாக தரையிறக்கம்!

author img

By

Published : Sep 29, 2019, 8:36 AM IST

அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு பாகிஸ்தானுக்கு புறப்பட்ட அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் பயணம் செய்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் அவர் மீண்டும் நியூயார்க் திரும்பினார்.

இம்ரான் கான்

ஐநாவின் 74ஆம் ஆண்டு பொதுச் சபைக் கூட்டம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 24ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. செப்டம்பர் 30ஆம் தேதியான நாளை இந்த கூட்டமானது முடிவடைகிறது. இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஆகியோர் நேற்று முன்தினம் உரையாற்றினர். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அமெரிக்காவுக்கு வருவதற்கு முன் மேற்கு ஆசிய நாடான சவூதி அரேபியா சென்றிருந்தார். அங்கிருந்து சவுதி இளவரசரின் சொந்த விமானத்தில் அமெரிக்காவுக்கு சென்றார்.

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ - ஐநாவில் தமிழில் கர்ஜித்த மோடி!

இந்நிலையில் அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு, நேற்று காலை இம்ரான்கானும் அந்நாட்டுப் பிரதிநிதிகளும் சவுதி இளவரசரின் விமானத்தில் பாகிஸ்தானுக்குப் புறப்பட்டனர். நியூயார்க் கென்னடி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இவ்விமானத்தில் சில நிமிடங்களிலேயே தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.

'காஷ்மீர் ரத்தக்களரியாகப் போகிறது' - இம்ரான் எச்சரிக்கை

இதையடுத்து நியூயார்க் விமான நிலையத்திற்கே விமானம் திரும்பியது. இம்ரான்கானை ஐநாவுக்கான பாகிஸ்தான் தூதர் மாலிஹா லோதி, ஏற்கனவே தங்கியிருந்த ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார். விமானம் சரி செய்யப்பட்டவுடன் இம்ரானும் பிரதிநிதிகளும் புறப்படுவார்கள் என லோதி தெரிவித்தார்.

Intro:Body:

நியூயார்க், அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு பாகிஸ்தானுக்கு புறப்பட்ட அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் பயணம் செய்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் அவர் மீண்டும் நியூயார்க் திரும்பினார்.ஐ.நா. வின் 74ம் ஆண்டு பொது சபை கூட்டம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த 24ம் தேதி முதல் நடந்து வருகிறது; நாளை இந்த கூட்டம் முடிகிறது.இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோர் நேற்று முன்தினம் பேசினர்.பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்காவுக்கு வருவதற்கு முன் மேற்கு ஆசிய நாடான சவுதி அரேபியா சென்றிருந்தார். அங்கிருந்து சவுதி இளவரசரின் சொந்த விமானத்தில் அமெரிக்காவுக்கு வந்தார்.இந்நிலையில் அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று காலை இம்ரான் கானும் அந்நாட்டு பிரதிநிதிகளும் சவுதி இளவரசரின் விமானத்தில் பாகிஸ்தானுக்கு புறப்பட்டனர்.நியூயார்க் கென்னடி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானத்தில் சில நிமிடங்களிலேயே தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து நியூயார்க்குக்கே அந்த விமானம் திரும்பியது.இம்ரான் கானை விமான நிலையத்தில் வழியனுப்பி வைத்த ஐ.நா. வுக்கான பாக். துாதர் மாலிஹா லோதி விமான நிலையத்துக்கு திரும்பி வந்தார். இம்ரான் கானையம் பிரதிநிதிகளையும் அவர்கள் ஏற்கனவே தங்கியிருந்த ஓட்டலுக்கு அழைத்து சென்றார்.விமானம் சரி செய்யப்பட்டவுடன் இம்ரானும் பிரதிநிதிகளும் புறப்படுவார்கள் என லோதி தெரிவித்தார்.இது பற்றி கென்னடி சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில் 'விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு பாக். பிரதமர் இம்ரான் உட்பட அனைவரும் உயிர் தப்பினர்' என்றனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.