அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் Forgotten Friend Reptile Sancturay என்ற பெயரில் ஊர்வன சரணாலயம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த சரணாலயத்தில் பாம்புகள், ஆமைகள் என பலவகையான ஊர்வன உயிரினங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் அங்கு பாதுகாக்கப்படும் ராஜநாகம் ஒன்று தன்னை தானே விழுங்கும் அபூர்வ நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. இதனை கண்ட பாம்பு வல்லுநரான ஜோதக்கர், தன் செல்போனில் பேஸ்புக் லைவ் செய்துள்ளார். இந்த அரிய நிகழ்வை கண்ட பலரும் ஆச்சரியமடைந்துள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜோதக்கர், பொதுவாக சில பாம்புகள் பசி வந்தால், மற்ற பாம்புகளையோ, அல்லது குட்டியையோ விழுங்கும். சில நேரங்களில் இதுபோன்ற அரிதான நிகழ்வும் நடைபெறும்.
தற்போது இந்த பாம்பு அதன் வாலை வேறு பாம்பு என நினைத்து விழுங்கும். பின்னர் தனது உடல் என்பதை உணர்ந்தவுடன் விழுங்குவதை நிறுத்தி விடும். ஆனால் இந்த சரணாலயத்தில் சரியாக பராமரிக்கப்படுகிறது. அப்படி இருந்தும் ஏன் இப்படி நடந்து கொண்டது எனத் தெரியவில்லை. அதுமனதளவில் ஏதேனும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றார்.