விண்வெளியில் முக்கியமான டூல்ஸ்களை பாதுகாப்பாக வைப்பதற்கு நாசா ஆராய்ச்சி மையம் "ரோபோடிக் டூல்ஸ் அலமாரி" (Robotic Tool Stowage (RiTS) ஒன்றை உருவாக்கியுள்ளது. இதை 'ரோபோ ஹோட்டல்' என அழைக்கின்றனர். இந்த ரோபோ ஹோட்டல் விண்வெளி நிலையத்திற்கு வெளியே பொருத்தப்பட்டுள்ளது.
இதில் முதல்கட்டமாக இரண்டு ரோபோக்களைத் தங்க வைப்பதற்கு முடிவு செய்துள்ளனர். இந்த ரோபோக்கள் ஆராய்ச்சி மையத்தில் அம்மோனியா போன்ற வாயுக்களால் ஏற்படும் கசிவைக் கண்டறியப் பயன்படுத்தப்படுகின்றது. ஆதலால், இந்த ரோபோக்களுக்கு ரோபோடிக் எக்ஸ்டெர்னல் லீக் லொகேட்டர் (Robotic External Leak Locators) (RELL) எனப் பெயர் வைத்துள்ளனர். இதில் ஒரு ரோபோவை கடந்த 2015ஆம் ஆண்டு, நாசா உருவாக்கியது. இந்நிலையில், இந்த ரோபோவிற்குத் துணையாக தற்போது, மற்றொரு ரோபோவை உருவாக்கி ஒன்றாகத் தங்க வைப்பதற்கு முடிவு செய்துள்ளது.
-
Robots need a place to stay in space, too. 🤖
— NASA (@NASA) December 4, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
NASA is attaching a “robot hotel” to the outside of the @Space_Station. The protective storage unit for critical robotic tools is set to launch on Dec. 4 aboard the 19th SpaceX commercial resupply mission: https://t.co/RPBKBFlC3x pic.twitter.com/Yw4RBXcOR8
">Robots need a place to stay in space, too. 🤖
— NASA (@NASA) December 4, 2019
NASA is attaching a “robot hotel” to the outside of the @Space_Station. The protective storage unit for critical robotic tools is set to launch on Dec. 4 aboard the 19th SpaceX commercial resupply mission: https://t.co/RPBKBFlC3x pic.twitter.com/Yw4RBXcOR8Robots need a place to stay in space, too. 🤖
— NASA (@NASA) December 4, 2019
NASA is attaching a “robot hotel” to the outside of the @Space_Station. The protective storage unit for critical robotic tools is set to launch on Dec. 4 aboard the 19th SpaceX commercial resupply mission: https://t.co/RPBKBFlC3x pic.twitter.com/Yw4RBXcOR8
விண்வெளி அலமாரியில் பாதுகாப்பாக வைத்திருக்கும் டூல்ஸ்களை கதிர் வீச்சு, எரிகற்கள், விண்வெளியில் உலவும் சிறு, பெறு துகள்கள் ஆகியவற்றிலிருந்து பத்திரமாக பாதுகாப்பதற்கு ஹோட்டலில், இரண்டு ரோபோக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளன. இந்த முயற்சி நாசாவின் வரலாற்றில் முக்கியப் பங்கு வகிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
இதையும் படிங்க: ஒரு ஆந்தை இனத்தைக் காக்க மற்றொரு ஆந்தை இனத்தை அழிக்கும் அமெரிக்கா!