அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ராணுவ அதிகாரத்தை கட்டுப்படுத்தும் மசோதா கடந்த மாதம் அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் தாக்கலானது.
இந்த மசோதா குறித்து வாக்கெடுப்பு புதன்கிழமை நடந்தது. அப்போது மசோதாவுக்கு ஆதரவாக 227 உறுப்பினர்களும் எதிராக 186 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
இந்த மசோதா ஈரான் உள்ளிட்ட நாடுகள் மீது டொனால்ட் ட்ரம்ப் ராணுவ நடவடிக்கை மேற்கொள்வதை கட்டுப்படுத்துகிறது.
முன்னதாக ஜனவரி மாதம் 3ஆம் தேதி ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அந்நாட்டின் தளபதி காசிம் சுலைமாணி கொல்லப்பட்டார்.
இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் சூழல் ஏற்பட்டது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க: 'அவளுடன் தொடர்பில் இருந்தேன்'- மனம் திறந்த பில் கிளிண்டன்!