கரோனா வைரஸ் பாதிப்பு உலகின் மற்ற நாடுகளைக் காட்டிலும் அமெரிக்காவில் அதிதீவிரமாக உள்ளது. அந்நாட்டில் இதுவரை, 9 லட்சத்து 25 ஆயிரம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 52 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
நோய் பாதித்தவர்களுக்கு சிகிச்சை வழங்கிவரும் பணிகளை மருத்துவர்கள் மேற்கொண்டுவரும் நிலையில், வைரசைக் கட்டுப்படுத்தும் புதிய யுக்திகள், மருத்துவ நடவடிக்கைகள் குறித்து அந்நாட்டு ஆய்வாளர்கள் இரவுபகலாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கான பணிகள் முடிக்கிவிடப்பட்டு, முதற்கட்ட பரிசோதனைகள் நிறைவடைந்துவிட்டன.
தற்போது அந்நாட்டின் மவுட் சினாய் பகுதியில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள ஆய்வாளர்கள், ஆன்டிபாடி எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தி சிகிச்சை முறை குறித்து புதிய ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ளும் விதமாக உடலில் இயற்கையாகவே ஆன்டிபாடிகள் உருவாகி வைரஸ் தாக்குதலைத் தடுக்கும். கரோனா வைரஸ் புதிதாக உள்ள நிலையில் மனித உடலில் செயற்கை ஆன்டிபாடியை செலுத்தி சிகிச்சை மேற்கொள்ளும் முயற்சியில் அமெரிக்க ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கரோனாவின் தாக்கம் இத்தலைமுறையின் தலையெழுத்தை தீர்மானிக்கும் - பில்கேட்ஸ்