ETV Bharat / international

என்னை பார்க்க ஒரு கோடி மக்கள் வரவுள்ளனர் - இந்திய வருகை குறித்து ட்ரம்ப் - இந்திய வருகை குறித்து ட்ரம்ப்

வாஷிங்டன்: தன்னை பார்க்க அகமதாபாத்தில் ஒரு கோடி மக்கள் குவியவுள்ளதாக இந்திய வருகை குறித்து ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

trump
trump
author img

By

Published : Feb 21, 2020, 10:28 PM IST

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் இந்திய வருகைக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. குஜராத் மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்ளும் ட்ரம்ப் அங்கு உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மோதேரா மைதானத்திற்கு வருகை தரவுள்ளார். அதன்பின்னர், மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்தை ட்ரம்பும், மோடியும் பார்வையிடவுள்ளனர்.

குஜராத்தில் உள்ள அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து சபர்மதி ஆசிரமத்திற்கு செல்லும் 22 கி.மீ. பாதையில் பிரமாண்ட சாலை பேரணி ஒன்றை பிரதமர் மோடியும், அதிபர் ட்ரம்பும் மேற்கொள்ளவுள்ளனர். அப்போது ஒரு கோடி மக்கள் தங்களை பார்க்க குவியவுள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், "இந்திய வருகை நினைத்து உற்சாகம் அடைகிறேன். மைதானத்திற்கும் விமான நிலையத்திற்கும் இடையே 70 லட்சம் மக்கள் எங்களை பார்க்க குவியவுள்ளனர். ஒரு கோடி மக்கள் குவியவுள்ளதாக கூறப்படுகிறது. உலகின் மிகப்பெரிய மைதானத்திற்கு செல்லும் பாதையில் குறைந்தபட்சம் 60 லட்சத்திலிருந்து ஒரு கோடி மக்கள் குவியவுள்ளனர்" என்றார்.

ஆனால், அகமதாபாத்தின் மொத்த மக்கள் தொகையே 70 லட்சம்தான் என உயர்மட்ட அரசு அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அகமதாபாத் நகராட்சி ஆணையர் விஜய் நெஹ்ரா கூறுகையில், "ட்ரம்ப், மோடி மேற்கொள்ளவுள்ள சாலை பரப்புரையின்போது ஒன்று முதல் இரண்டு லட்சம் மக்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதையும் படிங்க: 'மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம்' - இந்தியாவின் வருகை குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சூசகம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.