அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் ஒன்றான நியூயார்க்கில் சுரங்கப்பாதை பணி நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் நேற்று மாலை திடீரென அப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் மின்சாரம் இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
நகரின் முக்கிய வீதிகள், பெரிய பெரிய கட்டடங்கள், வீடுகள் என எங்கும் இருள்மயமே சூழ்ந்தது. மேலும், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகக் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து நியூயார்க் நகர போக்குவரத்துத் துறை தனது சுட்டுரை (ட்விட்டர்) பக்கத்தில், "மின்சாரம் துண்டிக்கப்பட்டது குறித்து ஆய்வு செய்து, அதனை விரைவில் சரிசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இதனால் பொதுமக்கள் சுரங்கப்பாதை நிலைய பயன்பாட்டைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மின்சாரம் வழங்குவதற்கான அனைத்துவித நடவடிக்கைகள் குறித்து தகவல்கள் விரைவில் வெளிவரும். மக்களின் பாதுகாப்புக்கே நாங்கள் முன்னுரிமை அளிப்போம்" எனப் பதிவிட்டுள்ளது.