ETV Bharat / international

நவம்பர் மூன்றாவது வாரத்தில் கரோனா தடுப்பூசி கண்டுபிடிக்க வாய்ப்பு!

author img

By

Published : Oct 16, 2020, 9:03 PM IST

ஃபைசர் இங்க் நிறுவனம் சார்பாக தயாரிக்கப்பட்டு வரும் கரோனா தடுப்பூசியை அவசர கால பயன்பாடாக அனுமதிக்க நவம்பர் மூன்றாம் வாரத்திற்கு முன்னதாக கோரிக்கை விடுக்க முடியாது என அந்த நிறுவனத்தில் சிஈஓ ஆல்பர்ட் தெரிவித்துள்ளார்.

pfizer-mid-november-earliest-it-can-seek-virus-vaccine-ok

கரோனாவுக்கான தடுப்பூசி தேர்தல் நாளுக்கு முன்னதாக வரும் என அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதியளித்து வரும் நிலையில், முன்னணி நிறுவனம் சார்பாக தயாரித்து வரும் ஆராய்ச்சிகள் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்திற்கு முன்னதாக வருவதற்கு வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு முன்னணி நிறுவனமான மாடர்னா இங்க், நவம்பர் 25ஆம் தேதி அதன் சொந்த தடுப்பூசியின் அங்கீகாரத்தை பெற முடியும் என்று அறிவித்திருந்தது.

ஆனால் கரோனா வைரஸ் தடுப்பூசி பாதுகாப்பானது என்பதை நிரூபிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் அவசர கால பயன்பாட்டிற்கு தகுதிபெற வேண்டும். அதற்கு கரோனாவுக்கு எதிரான எந்த தடுப்பூசியாக இருந்தாலும், பெரிய அளவிலான ஆய்வுகளில் பங்கேற்பாளர்களை குறைந்தது இரண்டாவது மாதத்திற்கு கண்காணிக்க வேண்டும். அவர்களுக்கு தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்பதை அறிய கால அவகாசம் தேவை. இதனால் ஃபைசர் நிறுவனம் சார்பாக தயாரிக்கப்பட்டு வரும் தடுப்பூசியை அவசர கால பயன்பாடாக அனுமதிக்க வேண்டும் என்றாலும், அந்த நிறுவனத்தால் நவம்பர் மூன்றாம் வாரத்திற்கு முன்னதாக கோரிக்கை விடுக்க முடியாது.

இந்நிலையில் ஃபைசரின் தலைமை நிர்வாக அலுவலர் ஆல்பர்ட் போர்லா, நவம்பர் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் 44 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வு நிச்சயம் ஒரு மைல்கல்லாக இருக்கும் என கணக்கிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் நிறுவனத்தின் வலைதளத்தில் எழுதியுள்ள கடிதத்தில், ''நாங்கள் அறிவியலின் வேகத்திற்கு வேலை செய்கிறோம்'' என குறிப்பிட்டுள்ளார்.

கரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிப்பில் நடத்தப்பட்டு வரும் இறுதி கட்ட ஆய்வில், ஃபைசர் மற்றும் அந்த நிறுவனத்தில் ஜெர்மன் பங்குதாரர்களான பயோஎண்டெக் ஆகிய நிறுவனங்கள் முன்னிலையில் உள்ளன. இந்த வருட இறுதிக்கு முன்னதாக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும், வரையறுக்கப்பட்ட அளவிலேயே மருந்துகள் இப்போது கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நான் சூப்பர் மேனாக உணர்கிறேன்' - ட்ரம்ப்பின் பலத்திற்கு காரணம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.