ETV Bharat / international

காபூல் தாக்குதல் பெரும் தவறு - பகிரங்க மன்னிப்புக் கேட்ட அமெரிக்கா

ஆகஸ்ட் மாதம் காபூலில் நடைபெற்ற ட்ரோன் தாக்குதல் அமெரிக்காவின் தவறான முடிவால் நடைபெற்றது எனப் பென்டகன் மன்னிப்புக் கேட்டுள்ளது.

Pentagon
Pentagon
author img

By

Published : Sep 18, 2021, 11:54 AM IST

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா தனது ராணுவத்தினரை முழுமையாக ஆகஸ்ட் மாதம் திரும்பப்பெற்றது. இந்தப் படை வெளியேற்ற நடவடிக்கை நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே தாலிபான் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியது.

ஆகஸ்ட் மாதத்தின் மத்தியில் தலைநகர் காபூலை கைப்பற்றிய தாலிபான், விமான நிலையத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.

இதன் காரணமாக ஆகஸ்ட் மாதம் முழுவதும் காபூல் நகர் வன்முறை பூமியாகக் காட்சியளித்தது. தாலிபானுடன் ஐ.எஸ். அமைப்பின் பயங்கரவாதிகளும் காபூலில் தாக்குதல் மேற்கொண்டதாகச் செய்திகள் வெளிவந்தன.

இதையடுத்து, காபூல் விமான நிலையத்தின் அருகே இருந்த குடியிருப்புப் பகுதியில் நின்றிருந்த கார் ஒன்றைக் குறிவைத்து அமெரிக்க ராணுவம் ட்ரோன் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தியது.

அந்தக் காரில் ஐ.எஸ். பயங்கவாதிகள் வெடிப்பொருள்களுடன் இருந்ததாக நம்பி அமெரிக்கா இத்தாக்குதலை நடத்தியது. இந்தத் தாக்குதல் ஆகஸ்ட் 29ஆம் தேதி நடைபெற்றது.

ஆனால், இத்தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்ததாகப் புகார் எழுந்தது. இந்தத் தாக்குதல் சம்பவம் சர்ச்சைக்குள்ளான நிலையில், அமெரிக்க தரப்பு தற்போது பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளது.

உளவுத் துறையின் தவறான வழிகாட்டுதலால் இந்தத் தவறான தாக்குதல் நடைபெற்றதாக அமெரிக்கா ராணுவத் தலைமையகமான பென்டகன் மன்னிப்புக் கேட்டுள்ளது. தாக்குதலில் உயிரிழந்த 10 பொதுமக்களுக்கு உரிய நிவாரணத்தை ராணுவம் வழங்கும் என உறுதியளித்துள்ளது.

இதையும் படிங்க: Ola E Scooters: 2 நாளில் ரூ.1,100 கோடிக்கு விற்பனை - மகிழ்ச்சியில் ஓலா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.