ஏதேனும் ஒரு துறையில் குறிப்பிடத்தக்க அளவுக்கான சாதனைபுரிபவர்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கி கெளரவிப்பது பில்கேட்ஸ் அறக்கட்டளையின் வழக்கம்.
அந்த வகையில் குழந்தைத் திருமணம், குழந்தைத் தொழிலாளர் முறை ஆகியவற்றுக்கு எதிராக பரப்புரை மேற்கொண்டதற்காக பயல் ஜாங்கித் என்ற 17 வயது சிறுமிக்கு சர்வதேச ‘சேஞ்ச் மேக்கர் விருது’ (Changemaker Award) வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதினை பில்கேட்ஸ் கைகளிலிருந்து பயல் ஜாங்கித் பெற்றுக்கொண்டார்.
இதே விழாவில்தான் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு சர்வதேச கோல்கீப்பர் விருது ('Global Goalkeeper's Award') வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சர்வதேச விருது வென்றுள்ள பயல் ஜாங்கித் இந்தியாவிற்கு பெருமைத் தேடி தந்திருப்பதாக நோபல் பரிசு பெற்றுள்ள கைலாஷ் சத்தியார்த்தி பாராட்டியுள்ளார்.
இதையும் படிங்க: 'என்னுடைய மாபெரும் பிழை' - மனம் திறக்கும் பில்கேட்ஸ்