ETV Bharat / international

முழு பேரழிவுக்கு வித்திட்ட ட்ரம்ப் - முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா தாக்கு! - Covid 19 USA

வாஷிங்டன்: கோவிட்-19 தொற்றை ட்ரம்ப் கையாண்ட விதம் ஒரு குழப்பமான முழு பேரழிவுக்கு வித்திட்டுள்ளதாக முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா விமர்சித்துள்ளார்.

Obama
Obama
author img

By

Published : May 10, 2020, 2:31 PM IST

அமெரிக்காவில், பொதுவாக முன்னாள் அதிபர்கள் இந்நாள் அதிபர்கள் குறித்தோ ஆட்சி குறித்தோ பெரும்பாலும் விமர்சிக்கமாட்டார்கள். ஆனால் தற்போது அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா இந்நாள் அதிபர் ட்ரம்ப் கரோனா தொற்றை முறையாகக் கையாளவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த விமர்சனம் அமெரிக்க அரசியலில் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா வெள்ளிக்கிழமை தனது நிர்வாகத்தில் பணிபுரிந்தவர்களுடன் உரையாடலில் ஈடுபட்டார். அது தொடர்பான ஆடியோவை யாகூ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் கோவிட்-19 தொற்றை ட்ரம்ப் கையாண்ட விதம் ஒரு குழப்பமான முழு பேரழிவுக்கு வித்திட்டுள்ளதாக ஒபாமா விமர்சித்தார்.

மேலும் ரஷ்யா விசாரணை தொடர்பாக அமெரிக்காவின் புலனாய்வு நிறுவனமான எஃப்.பி.ஐ-யிடம் உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கூறியதாகக் குற்றம்சாட்டப்பட்ட அதிபர் ட்ரம்பின் முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் ஃப்ளின் மீதான குற்றச்சாட்டுகளைக் கைவிட, நீதித் துறை எடுத்த முடிவு, அமெரிக்காவின் சட்ட அமைப்பிற்குப் பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "நாம் நீண்ட கால போராட்டமாகச் சுயநலம், பழமைவாதம், பிரிவினைவாதம் ஆகியவற்றுக்கு எதிராகப் பரப்புரை மேற்கொண்டுவருகிறோம். மிகவும் மோசமாகக் கையாளப்பட்ட பெருந்தொற்றுக்கு இவையும் ஒரு காரணம். சிறந்த அரசுகளுக்கும்கூட, இது மோசமான விளைவுகளையே ஏற்படுத்தியிருக்கும்.

'எனக்கு என்ன ஆகப்போகிறது' என்ற மனநிலையில், இப்போதுள்ள அரசிடம் இருப்பதால் அது ஒரு குழப்பமான முழு பேரழிவுக்கு வித்திட்டுள்ளது" என்று காட்டமாக விமர்சித்தார்.

மேலும், நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பிடனுக்கு ஆதரவான தனது பரப்புரையில் இணையுமாறும் வேண்டுகோள் விடுத்தார். அமெரிக்காவில் கோவிட்-19 தொற்று காரணமாக, இதுவரை 13,47,309 பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 80,037 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: புலிட்சர் விருது பெற்றவர்கள் திருடர்கள் - செய்தியாளர்களை விமர்சித்த ட்ரம்ப்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.