ETV Bharat / international

மீண்டும் தொடங்கும் அமெரிக்கா, வட கொரியா இடையிலான பேச்சுவார்த்தை!

தென் கொரிய உளவு அமைப்பானது அமெரிக்கா, வட கொரியாவுக்கு இடையிலான அணுசக்தி குறித்த பேச்சுவார்த்தை இன்னும் சில வாரங்களில் மீண்டும் தொடங்கும் எனத் தெரிவித்ததுள்ளது.

author img

By

Published : Sep 25, 2019, 10:09 AM IST

Updated : Sep 25, 2019, 10:25 AM IST

பேச்சுவார்த்தை குறித்த பேச்சுவார்தை மீண்டும் தொடங்கும்

தென் கொரிய நாடாளுமன்ற உறுப்பினரான கிம்-மின்-கி, இதுகுறித்து கூறுகையில்; அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன்னை மீண்டும் சந்தித்து பேசுவதற்கு வாய்ப்புள்ளது என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக தென் கொரியா அரசுக்கு உளவுத் துறையும் விளக்கமளித்ததாகத் தெரிகிறது.

பேச்சுவார்த்தை குறித்த பேச்சுவார்தை மீண்டும் தொடங்கும்
மீண்டும் தொடங்க இருக்கும் அமெரிக்க - வடகொரியப் பேச்சுவார்த்தை

மேலும் அமெரிக்காவுக்கும், வட கொரியாவுக்கும் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை இன்னும் சில வாரங்களுக்குள் தொடங்கும் என்று உளவுத் துறை அதிகாரிகள் சொன்னதாக கிம்-மின்-கி கூறினார்.

முன்னதாக வட கொரியா கடந்த ஆண்டு தொடக்கத்தில் அணு ஆயுதங்களைக் கைவிடுவதாக அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து தென்கொரிய நாடாளுமன்ற உறுப்பினரின் கருத்தின்படி அமெரிக்காவுக்கும், வட கொரியாவுக்கும் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : அமெரிக்கா அதிபரைப் பார்த்து முறைத்த சிறுமி!

Intro:Body:

இன்னும் 2 அல்லது 3 வாரங்களுக்கும் அமெரிக்காவுக்கும், வட கொரியாவுக்கும் இடையிலான அணுசக்திப் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கும் என்று தென் கொரியா உளவு அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பை மேற்கோள் காட்டி தென் கொரிய நாடாளுமன்ற உறுப்பினர் கிம் மின்-கி செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன்னை மீண்டும் சந்தித்துப் பேசுவதற்கு வாய்ப்புள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் தெரிவித்திருந்தார்.

அதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக தென் கொரிய அரசுக்கு உளவுத் துறை விளக்கமளித்தது.

அப்போது, இன்னும் 2 முதல் 3 வாரங்களுக்குள் அமெரிக்காவுக்கும், வட கொரியாவுக்கும் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கும் என்று உளவுத் துறை அதிகாரிகள் கூறினர் என்றார் கிம் மின்-கி. அணு ஆயுதங்களைக் கைவிடுவதாக வட கொரியா கடந்த ஆண்டு தொடக்கத்தில் அறிவித்ததைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கும், அந்த நாட்டுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கியது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் ஆகியோர் சிங்கப்பூரிலும், வியத்நாம் தலைநகர் ஹனோயிலும் இரு முறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும், கொரிய எல்லைப் பகுதியில் கிம் ஜோங்-உன்னை அதிபர் டிரம்ப் கடந்த ஜூன் மாதம் 30-ஆம் தேதி திடீரென சந்தித்து பேசினார்.

எனினும், வட கொரியா மீதான பொருளாதாரத் தடைகளை உடனடியாகத் தளர்த்த அவர் திட்டவட்டமாக மறுத்து வருகிறார்.

இதன் காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையிலான அணுசக்தி பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டது.

இந்த நிலையில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்து வந்த ஜான் போல்ட்டனை அதிபர் டிரம்ப் இந்த மாதம் பதவி நீக்கம் செய்தார்.

லிபியாவின் அணு ஆயுதத் திட்டங்களை அந்த நாடு கைவிடச் செய்ததற்குக் கையாண்ட வழிமுறையையே வட கொரியாவிடமும் பின்பற்ற வேண்டும் என்று போல்ட்டன் வலியுறுத்தியதாகக் குற்றம் சாட்டிய அதிபர் டிரம்ப், இந்த விவகாரத்தில் வட கொரியாவுக்கென்று தனி அணுகுமுறையைக் கையாள வேண்டிருக்கும் என்று குறிப்பிட்டார்.

அதையடுத்து, அமெரிக்காவுக்கும், வட கொரியாவுக்கும் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்தச் சூழலில், அந்தப் பேச்சுவார்த்தை 3 வாரங்களுக்குள் தொடங்கும் என்று தென் கொரிய உளவு அமைப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Conclusion:
Last Updated : Sep 25, 2019, 10:25 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.