ETV Bharat / international

'தவறான தகவல்களை பரப்பும் ட்ரம்ப் ஆதரவாளர்கள்': அதிரடி காட்டிய டிக்டாக்!

author img

By

Published : Nov 5, 2020, 2:09 PM IST

சான் பிரான்சிஸ்கோ: தேர்தல் வெற்றி குறித்த தவறான தகவல்களை டிக்டாக்கில் குடியரசு கட்சியை சேர்ந்த இரண்டு கணக்குகள் பரப்பி வந்த நிலையில், அவற்றை நீக்கியுள்ளதாக டிக்டாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

டிக்டாக்
டிக்டாக்

அமெரிக்க அதிபர் யார் என்பதில், ட்ரம்ப் மற்றும் ஜோ பிடன் இழுபறி ஏற்பட்டுள்ள நிலையில், முக்கிய மாகாணங்களில் முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டியுள்ளது. இந்நிலையில், தேர்தலில் வெற்றிப்பெற்று விட்டோம் போன்ற தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி விடக்கூடாது என்பதில் பேஸ்புக், ட்விட்டர் நிறுவனங்கள் கவனமுடன் செயல்பட்டு வருகிறது.

நேற்று அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டரில், "பெரிய வெற்றியை நோக்கியுள்ளோம். ஆனால், முடிவுகளை மாற்ற ஜனநாயக கட்சி சதி செய்ய முயற்சிக்கிறது. இம்மாதிரியான வேலைகளில் அவர்கள் ஈடுபடுவதிலிருந்து தடுத்து நிறுத்துவோம். வாக்குப்பதிவு நிறைவடைந்த பிறகு, வாக்குகள் செலுத்தக் கூடாது" என பதிவிட்டிருந்தார். இது சர்ச்சையான பதிவு என்றும்; தேர்தல் குறித்து தவறான தகவல் பகிரப்பட்டுள்ளது எனவும் கூறி ட்விட்டர் நிறுவனம் உடனடியாக அதனை நீக்கியது.

இந்நிலையில், தேர்தலில் வெற்றிப்பெற்று விட்டோம் போன்ற தகவல்களை டிக்டாக்கில் குடியரசு கட்சியை சேர்ந்த இரண்டு கணக்குகள் தொடர்ச்சியாக பதிவிட்டுள்ளன. இதுகுறித்து ஆய்வு மேற்கொண்ட டிக்டாக், தேர்தல் வாக்குப்பதிவுகள் எண்ணப்பட்டு கொண்டிருக்கும் சமயத்தில், பொய்யான தகவல்கள் பதிவிடுவது எங்கள் நிறுவன கொள்ளைகளுக்கு எதிரானது ஆகும். இதைக் கருத்தில் கொண்டு, இந்த கணக்குகளின் வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளன என டிக்டாக் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக கருத்து பதிவிட்டுள்ள நியூயார்க் டைம்ஸின் நிருபர் டெய்லர் லோரென்ஸ், டிக்டாக் அந்த இரண்டு கணக்குகளின் வீடியோக்களை மட்டும்தான் நீக்கியுள்ளனர். கணக்கு இன்னமும் செயல்பாட்டில் தான் உள்ளது. அவர்கள், தற்போதும் பொய்யான தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள்" எனக் குறிப்பிட்டிருந்தார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.