ETV Bharat / international

அமெரிக்க செனட் சபையின் புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபை உறுப்பினர்கள் நேற்று முன்தினம் (ஜன.2) பதவியேற்றனர்.

அமெரிக்க மேலவை
அமெரிக்க மேலவை
author img

By

Published : Jan 4, 2021, 1:01 PM IST

வாஷிங்கடன்: கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்துமுடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிப்பெற்ற 117ஆவது அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபை உறுப்பினர்கள் நேற்று முன்தினம் (ஜன.2) பதவியேற்றுக்கொண்டனர்.

அந்நாட்டின் தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் செனட் சபை உறுப்பினர்களின் வெற்றியை ஏற்றுக்கொள்ளாத நிலையில் பதவியேற்பு நடைபெற்றுள்ளது.

தற்போது, அந்நாட்டின் கீழவையான ஹவுஸ் ஆஃப் ரெப்பிரசன்டேடிவ் சபையில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த 222 உறுப்பினர்களும், குடியரசு கட்சியைச் சேர்ந்த 211 உறுப்பினர்களும் உள்ளனர்.

இந்நிலையில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த நான்சி பெல்லோசி, சபாநாயகராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் இரண்டு ஆண்டுகள் இப்பதவியில் இருப்பார்.

பெரும் கரோனா நெருக்கடிச் சூழலில் 117ஆவது அமெரிக்க நாடாளுமன்றம் கூடுகிறது என அமெரிக்க செனட் சபை உறுப்பினர் மிட்ச் கூறியுள்ளார். இரு அவைகளின் கூட்டுக்கூட்டம் நாளை மறுநாள் (ஜன.6) நடைபெறவுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிப்பெற்ற ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வரும் 20ஆம் தேதி அதிபராக பதவியேற்கவுள்ளார்.

அவருடன் கமலா ஹாரிஸ் துணை அதிபராக பதவியேற்கவுள்ளார். பதவியேற்பு விழாவின் போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளைச் சேர்ந்த குடியரசு கட்சி உறுப்பினர்கள், பைடனின் வெற்றிக்கு எதிர்ப்பு தெரிவிக்க திட்டமிட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: தேர்தல் முடிவை மாற்ற அலுவலரை மிரட்டிய ட்ரம்ப் - அதிர்ச்சியை ஏற்படுத்திய ஒலிப்பதிவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.