அமெரிக்காவின் புளோரிடாவிலிருந்து செவ்வாய் கிரகத்திற்கு வெற்றிகரமாக 'பெர்சிசவரன்ஸ்' என்ற பெயர் கொண்ட விண்கலம் இன்று (ஜூலை30) வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
ரோவர் மற்றும் ஹெலிகாப்டருடன் அமெரிக்காவின் நாசா விண்கலம் விண்ணில் பாய்ந்தது. செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பட்டுள்ள ரோவர் விண்கலத்திற்கு 'பெர்சிசவரன்ஸ்' என்று நாசா, பெயரிட்டுள்ளது.
300 மில்லியன் மைல்களை கடந்து பெர்சிசவரன்ஸ் விண்கலம், செவ்வாய் கிரகத்தை அடுத்தாண்டு பிப்ரவரியில் அடையலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த பெர்சிசவரன்ஸ்' விண்கலம் செவ்வாய் கிரகத்தில் ஒரு வருடம் வரை தங்கி ஆய்வுகளில் ஈடுபடும். செவ்வாய் கிரகத்தில் ஒரு வருடம் என்பது பூமியைப் பொறுத்தவரை 687 நாட்களாகும்.
அங்கு செவ்வாய் கிரகத்தின் பழமையான தன்மை, மனிதன் வாழ்வதற்கு எதுவும் சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்பது குறித்து ஆராயவுள்ளது. அதுமட்டுமின்றி அங்கிருந்து பாறை, மண் ஆகியவற்றின் மாதிரிகளையும் இந்த விண்கலம் பூமிக்கு கொண்டுவரும் என நாசா தெரிவித்துள்ளது.
செவ்வாய் கிரகத்தில் நாசாவின் இரு விண்கலங்களான 2012 கியூரியாசிட்டி மற்றும் 2018ஆம் இன்சைட் ஆகியவை ஆய்வு நடத்திவருகின்றன. இது தவிர ஆறு விண்கலன்கள் செவ்வாய் கிரகத்தை ஆராய்ந்துவருகின்றன.
அதில் மூன்று அமெரிக்காவையும் இரண்டு ஐரோப்பிய நாடுகளையும் சேர்ந்தது. மற்றொன்று இந்தியாவை சேர்ந்ததாகும்.
இதையும் படிங்க...ஹாங்காங்கில் அரசுக்கு எதிராக ஆன்லைனில் பதிவிட்ட 4 பேர் கைது!