இது குறித்து தனது வலைதள பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ள அமெரிக்காவை சேர்ந்த மாடர்னா பாராமெடிக்கல் கம்பெனி, “மாடர்னா, இன்க் நிறுவனம் கரோனாவிற்கு எதிரான களத்தில் சிறப்பாக செயல்ப்பட்டுவருகிறது. தற்போது மாடர்னா கரோனா தடுப்பூசி விநியோக புதுப்பிப்பை பெற்றுள்ளது. அதன் மூலம் இந்தாண்டு எங்களின் உற்பத்தியை 500 மில்லியனிலிருந்து 600 மில்லியனாக உயர்த்துகிறோம்” என தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி, 2021ஆம் ஆண்டிலேயே ஒரு பில்லியன் அளவைக் கொண்டுவருவதற்கு தொடர்ந்து முதலீடு செய்வதற்கும், பணியாளர்களைச் சேர்ப்பதற்கும் மாடர்னா முயற்சிகளை எடுத்துவருகிறது என குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக 500 மில்லியன் கரோனா தடுப்பூசி டோஸ்களை உற்பத்தி செய்யவுள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த மாடர்னா பாராமெடிக்கல் கம்பெனி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க...ஜப்பானில் பிப்ரவரி இறுதியில் கோவிட் தடுப்பூசி!