ETV Bharat / international

இம்மாத இறுதிக்குள் கரோனா தடுப்பூசி வெளியாகுமா? - கரோனா தடுப்பூசி

வாஷிங்டன்: கரோனா தடுப்பூசியின் செயல்திறன் குறித்த தரவுகளைப் பகுப்பாய்வு செய்தபின், அதற்கான இறுதி அறிவிப்பு வெளியிடப்படும் என்று மாடர்னா நிறுவனம்  தெரிவித்துள்ளது.

இம்மாத இறுதிக்குள் கரோனா தடுப்பூசி வெளியாகுமா?

author img

By

Published : Nov 12, 2020, 5:22 PM IST

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரசைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சியில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன. இதற்கான தடுப்பு மருந்தை உருவாக்கும் ஆராய்ச்சியில் மருத்துவ வல்லுநர்கள், அறிவியலாளர்கள் பலரும் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், மாடர்னா நிறுவனம் சுமார் 30 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி மருந்துகளைச் செலுத்தி மருத்துவப் பரிசோதனையை மேற்கொண்டுவருகிறது. இது எந்தவித பக்க விளைவையும் ஏற்படுத்தாது என்று சி.என்.என். தெரிவித்துள்ளது.

இந்த தடுப்பூசி அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (எஃப்.டி.ஏ.) அங்கீகாரத்திற்கான பரிசீலனையில் உள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த சுமார் 53 பேருக்கு இந்தத் தடுப்பூசி செலுத்தி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தரவு மற்றும் பாதுகாப்பு கண்காணிப்பு வாரியத்திற்கு, ஆய்வுசெய்யப்பட்ட தரவுகளை அனுப்ப ஏதுவாக ஒரு சுயாதீன வல்லுநர்கள் குழு தரவு வரைவை தயாரித்துவருகிறது. புள்ளிவிவர தரவுகளின்படி குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான நபர்களுக்கு, இந்தத் தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தால், வைரசுக்கு எதிராக இந்த மருந்து பயனுள்ள வகையில் செயலாற்றுகிறது என்று ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

அமெரிக்காவில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நேரத்தில், கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த சுமார் 53-க்கும் மேற்பட்டவர்களுக்கு இந்தத் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதற்கிடையில், தடுப்பூசி குறித்த ஃபைசரின் நம்பிக்கைக்குரிய முடிவுகள் மாடர்னாவிற்கும் நல்ல செய்தி என்று தொற்று நோய்கள் குறித்த நாட்டின் முன்னணி வல்லுநரான டாக்டர் அந்தோணி ஃபவுசி தெரிவித்துள்ளார்.

மருந்து நிறுவனமான அமெரிக்கன் ஃபைசர் மற்றும் ஜெர்மன் பயோடெக்னாலஜி நிறுவனமான பயோஎன்டெக் ஆகியோரால் உருவாக்கப்பட்ட கரோனா வைரஸ் தடுப்பூசி தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாப்பதில் 90 விழுக்காட்டிற்கும் மேல் நல்ல முடிவுகளை தருவதாக ஒரு பகுப்பாய்வில் தெரியவந்துள்ளது.

இது ஒரு 'வரலாற்றுச் சிறப்புமிக்கத் தருணம்' என்று தடுப்பூசி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் தலைவர் கேத்ரின் ஜென்சன் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.