சியாட்டில்: மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தங்களிடம் உள்ள 50 செய்தி தயாரிப்பு ஊழியர்களை ஜூன் 30ஆம் தேதிக்கு பிறகு, வேலைக்கு வரவேண்டாம் எனக் கூறி, அவர்களுக்கு பதிலாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சியாட்டில் டைம்ஸின் அறிக்கைபடி, சுமார் 50 ஊழியர்கள், அதாவது ஊழியர்களை வழங்கும் நிறுவனங்களான அக்வென்ட், ஐ.எஃப்.ஜி மற்றும் மேக் கன்சல்டிங் மூலம் ஒப்பந்தம் செய்யப்பட்டு, எம்.எஸ்.என் தளத்தின் செய்தி தயாரிப்புப் பிரிவில் பணியாற்றி வந்தனர். இவர்கள் ஜூன் 30ஆம் தேதிக்குப் பிறகு வேலைக்கு வரவேண்டாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த செய்தி தயாரிப்பு ஒப்பந்த ஊழியர்கள் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் செய்தி தளமான எம்.எஸ்.என்.காம் மற்றும் நிறுவனத்தின் பிற செய்தி உள்ளடக்கக் குழுவுடன் இணைந்து பணியாற்றுகின்றனர்.
இது குறித்து மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், அனைத்து நிறுவனங்களையும் போலவே, தாங்களும் நிறுவனத்தின் முன்னேற்றத்தை கணக்கில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.