ஓக்லஹோமா மாகாணத்திலுள்ள துல்சா என்னும் பகுதியில் குற்றவாளியாகக் கருதப்படும் டாமாகோ டெய்லர் என்பவர் ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி காவல் துறையின் பிடியிலிருந்து தப்ப முயன்றார். அப்பொழுது, அங்குள்ள 30 அடி உயரம் கொண்ட பாலத்தின் பக்கவாட்டு சுவரை பிடித்தபடி தொங்கியுள்ளார்.
அந்த சமயத்தில், அவரை துப்பாக்கி முனையில் காவல் துறையினர் மிரட்டினார். இதனையடுத்து, பீதியில் டெய்லர் பாலத்திலிருந்து கீழே விழுந்தார். இதில், அவருக்கு மண்டை உடைந்ததையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சிகிச்சை முடிந்ததையடுத்து காவல் துறையினர் அவரை கைது செய்தனர்.
இந்நிலையில், இந்த சம்பவத்தை காவல் துறையினர் பதிவு செய்த காணொலி தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில், டெய்லர் கீழே விழுவது அனைவரையும் பதைபதைக்க வைத்துள்ளது. இந்த வீடியோவை தற்போது ஏன் வெளியிடப்பட்டுள்ளது என்ற காரணம் தெரிவிக்கப்படவில்லை.