ETV Bharat / international

வெள்ளை மாளிகையை தாக்க முயன்றதாக இளைஞர் ஒப்புதல்! - மேத்யூஸ்

வெள்ளை மாளிகை மற்றும் ட்ரம்ப் டவர் ஆகியவற்றை தாக்க முயன்றதாக தென் கரோலினா இளைஞர் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க பாதுகாப்பு படை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

Man pleads guilty in plot to attack White House attack White House guilty in plot to attack White House ISIS conspiracy plotted attack on Trump Tower in New York city வெள்ளை மாளிகை மேத்யூஸ் ஐ.எஸ்

author img

By

Published : Nov 25, 2020, 8:47 AM IST

சான் அன்டோனியா: அமெரிக்காவின் தென் கரோலினா பகுதியில் கைது செய்யப்பட்ட இளைஞர், ஐ.எஸ். பயங்கரவாத குழுக்களால் ஈர்க்கப்பட்டு பயங்கரவாத செயல்களுக்கு திட்டமிட்டதாக அந்நாட்டின் பாதுகாப்பு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

தென் கரோலினா மாகாணத்தின் சான் அன்டோனியா நகரில் கிறிஸ்டோபர் சீன் மேத்யூஸ் என்ற 34 வயது இளைஞரை காவலர்கள் கைதுசெய்தனர். இவர் இஸ்லாமிய அடிப்படை பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டார் என்ற குற்றஞ்சாட்டின் அடிப்படையில் காவலர்கள் கைது செய்திருந்தனர்.

இந்நிலையில் மேத்யூஸ் தன் மீதான குற்றங்களை நீதிபதி முன்னிலையில் ஒப்புக்கொண்டுள்ளார். ஐ.எஸ். உள்ளிட்ட பயங்கரவாத இயக்கங்களின் செயல்களால் தூண்டப்பட்டு, அந்த இயக்கத்துக்கு ஆள்சேர்த்தல், வெடிகுண்டு தயாரிக்கும் தகவல்களை அளித்தல் மற்றும் நிதி சேகரித்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டதாக கூறினார்.

ஏற்கனவே இந்த வழக்கில் சிக்கிய மற்றொரு குற்றவாளியான ஜெய்லின் கிறிஸ்டோபர் மோலினாவுக்கு 40 ஆண்டுகளும், கிறிஸ்டோபருக்கு 20 ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் கிறிஸ்டோபரிடம் மீண்டும் விசாரணை நடத்தப்படுகிறது. இதனால் அவரின் தண்டனை காலம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க: அமெரிக்கா பறந்த காதலி ; தற்கொலை செய்துகொண்ட ஆந்திர இளைஞர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.