சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்க்லே பங்கேற்ற மெய்நிகர் கலந்துரையாடலில் பாகிஸ்தான் கல்வி ஆர்வலரும், நோபல் பரிசு பெற்றவருமான மலாலா யூசுப்சாய் கலந்துக்கொண்டு உரையாற்றினார்.
முதலில் பேசிய மேகன், பெண்களுக்கு இளம் வயதிலே கல்வி கிடைக்கும் பட்சத்தில், வாழ்வில் நிச்சயம் வெற்றி பெறுகிறார்கள். சமூக வெற்றிப்பெறுவதற்கு தேவையான படிக்கட்டுகளாக தான் கல்வி உள்ளது. பெண்கள் உயர்ந்த இடத்தில் அமர்ந்திருந்தால், சமூகத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர முடியும்" என நம்புவதாக தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து பேசிய மலாலா, "கரோனா தொற்றின் காரணமாக சுமார் 20 மில்லியன் குழந்தைகள் பள்ளியிலிருந்து வெறியேறியுள்ளனர். இச்சூழலில் குடும்பத்தின் வறுமையை காரணம் காட்டி குழந்தைகளின் பெற்றோர்கள் அவர்களை தொழிலாளர்களாகவோ அல்லது திருமணம் செய்து வைக்கவும் பல்வேறு சாத்திய கூறுகள் உள்ளன. எனவே, குழந்தைகள் பாதுகாக்கப்படுவதை நாம் உறுதி செய்ய வேண்டும். மீண்டும் பள்ளிக்கு அவர்களை அனுப்பி வைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது" என்றார்.
இதையும் படிங்க:உலக பெண் குழந்தைகள் தினம்: மருத்துவமனையில் மரக்கன்றுகள் நட்ட மாணவர்கள்