ETV Bharat / international

எப்போது திரும்பும் இயல்புநிலை? விளக்கும் அமெரிக்க தொற்று நோய் நிபுணர் - எப்போது திரும்பும் இயல்புநிலை

வாஷிங்டன்: அடுத்தாண்டு இறுதியில் உலகம் மெல்ல கரோனா தொற்றில் இருந்து விடுபடும் என்று நம்புவதாக அமெரிக்க தொற்று நோய் நிபுணர் அந்தோனி ஃபாசி தெரிவித்துள்ளார்.

Anthony Fauci
Anthony Fauci
author img

By

Published : Oct 30, 2020, 2:18 PM IST

கரோனா பரவல் காரணமாக உலக நாடுகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் போன்ற நாடுகளில் கடந்த சில மாதங்களாக குறைந்திருந்த கரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

மறுபுறம், கரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் ஆய்வுகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்நிலையில், தடுப்பு மருந்து புழக்கத்திற்கு வந்தாலும் அடுத்தாண்டு இறுதியில் உலகம் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று அமெரிக்காவின் தொற்று நோய் நிபுணர் அந்தோணி ஃபாசி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "2021ஆம் ஆண்டின் இரண்டாவது அல்லது மூன்றாம் காலாண்டில் மக்கள் தொகையில் கணிசமானோருக்கு தடுப்பு மருந்தை வழங்கிவிட்டோம் என்றால் 2021ஆம் ஆண்டின் இறுதிக்குள், உலகம் இயல்பு நிலைக்கு திரும்பும் வாய்ப்புகள் அதிகம். அப்படி இல்லையென்றாலும் 2022ஆம் ஆண்டு தொடக்கத்தில் உலகம் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும்.

அமெரிக்காவில் மாஸ்க்குகளை அணிவது என்பது அரசியலாகிவிட்டது. இது மிகவும் கடினமான ஒன்று. உலகளவில் இது பேசு பொருளாகியுள்ளது. மக்கள் தங்கள் அரசியல் நிலைப்பாட்டை பொறுத்தே இங்கு மாஸ்க்குகளை அணிவது குறித்து முடிவெடுக்கின்றனர்.

முதல் இரண்டு கட்டங்களில் மக்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை நான் உருவாக்கினேன். அனைவரும் அதை முறையாக பின்பற்றியிருந்தால் நிலைமை இவ்வளவு மோசமாகியிருக்காது" என்றார்.

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகளின்படி, அமெரிக்காவில் 89.37 லட்சம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 2.28 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல உலகெங்கும் 4.48 கோடி பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 11.78 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: வெளிநாடுகளிலும் தடுப்பு மருந்தை உற்பத்தி செய்ய தயார் - புடின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.