உலகில் தயாரிக்கப்படும் மின் விளக்குகள் 2 மாதங்கள் மூலம் 6 மாதங்கள் வரையே ஒளிரும் தன்மை கொண்டவையாக இருந்து வருகிறது. ஆனால் யாரும் நம்ப முடியாத வகையில் 118 வருடங்களாக மின் விளக்கு அணையாமல் ஒளிர்ந்து கொண்டு வருகிறதை அறிவியல் அதிசயமாகக் காணப்பட்டு வருகின்றனர்.
1890களின் பிற்பகுதியில் கலிபோர்னியாவில் உள்ள அமெரிக்காவின் ஷெல்பி எலக்ட்ரிக் நிறுவனம் கார்பன்-ஃபிலிமென்ட் பயன்படுத்தி 60w திறன் கொண்ட சென்டென்னியல் விளக்கை அடோல்ப் ஏ. சைலட் என்பவர் தயாரித்தார்.
இந்த மின் விளக்கானது ஷெல்பி நிறுவனத்திலிருந்து முதன்முதலாக டென்னிஸ் பேர்னல் என்னும் நபருக்கு 1901 ஆம் ஆண்டு இலவசமாக அளிக்கப்பட்டுள்ளது. பெர்னலுக்கு சொந்தமான லிவர்மொர் வாட்டர் பவர் நிலையத்தில் மின் விளக்கைப் பொருத்தினார். பின்னர் அதை 1903 ஆம் ஆண்டு லிவர்மோர் தீயணைப்பு நிலையத்துக்குக் கொடுத்தார். அதன்பிறகு 1937 ஆம் ஆண்டு தீயணைப்பு நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்ற காரணத்தினால் ஒரு வாரம் மின் விளக்கு அணைத்து வைக்கப்பட்டது. ஆனால் நீண்ட காலங்களாக உபயோகித்த காரணத்தால் மின் விளக்கின் பிரகாசம் இரவு விளக்கு ஒளியின் அளவான 4w பிரகாசமே கொடுத்து வந்தது.
இதனையடுத்து 1976 ஆம் ஆண்டு சென்டென்னியல் மின் விளக்கு மற்றொரு தீயணைப்பு நிலையத்துக்கு முழு போலிஸ் பாதுகாப்புடன் பாதுகாப்கக் கொண்டு செல்லப்பட்டது. இந்த பயணத்தினால் 22 நிமிடங்கள் அணைத்து வைக்கப்பட்டது.
இச்சம்பவத்திற்குப்பின் மின் விளக்கு ஒளிர்ந்து கொண்டிருக்கும் சாதனையை மின் இணைப்பு துண்டிப்பினால் தடைப்படாமல் பாதுகாத்து கொள்வதற்காகப் பிரத்யேகமாக யுபிஎஸ் எனப்படும் தடையில்லா மின்சார சேவையைப் பொருத்தினர். மேலும் 24 மணி நேரமும் கண்காணிக்கும் வசதிக்காக சிசிடிவி கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. இதனை நேரடியாகப் பொதுமக்கள் இணையம் வழியாகப் பார்க்கும் வசதியும் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்நிலையில் 1976 ஆம் ஆண்டு சென்டென்னியல் மின் விளக்கு வெடித்து விட்டதை கேமராவில் பார்த்ததாக மக்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. ஆனால் சென்டென்னியல் மின் விளக்கு யுபிஎஸ் கோளாறு காரணமாகவே மின்சார தடையினால் அணைந்துள்ளது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த கோளாறினால் 10 மணி நேரம் மின் விளக்கு அணைக்கப்பட்டு இருந்தது. பின்பு யுபிஎஸ் சரிசெய்யப்பட்டவுடன் சென்டினென்டல் மின் விளக்கு மீண்டும் பிரகாசமாக 30w போல் ஜொலித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஆனால் சிறிது நேரத்திலே மீண்டும் இரவு விளக்கின் ஒளியளவுக்கே மாறியது.
சென்டினென்டல் மின் விளக்கு மட்டுமின்றி பழங்காலத்தில் தயாரிக்கப்பட்ட பல்வேறு விளக்குகள் நீடித்து உழைக்கும் தன்மை கொண்டவையாகவே இருந்து வந்துள்ளது. இதனால் 1920 ஆம் ஆண்டு பிலிப்ஸ் உள்பட மூன்று பெரிய எல்க்டிரிக் நிறுவனங்கள் சேர்ந்து ஃபோபஸ் கார்ட்டல்(Phoebus cartel) என்னும் திட்டத்தை அறிமுகம் செய்தனர். இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள், தயாரிக்கப்படும் மின் விளக்குகள் அதிகபட்சம் 1000 மணி நேரம் மட்டுமே ஒளிரும் தன்மை கொண்டதாக கண்டிப்பாக இருக்க வேண்டும். இத்திட்டத்தினால் நீடித்து உழைக்கும் மின் விளக்குகளின் உற்பத்தி வடிவம் மாற்றியமைக்பட்டது. அந்த காலத்திலே 6 மாதங்களில் புதிய மின் விளக்குகள் வாங்க வேண்டும் என்று வியாபார யுக்தியுடன் இத்தகைய முடிவை எடுத்துள்ளனர்.
எனினும் தற்போது வரை சென்டினென்டல் மின் விளக்கு 118 வருடங்கள் அதாவது 1,033,680 மணிகள் தொடர்ந்து ஒளிர்ந்து வருகிறது. மேலும் தி கின்னஸ் புக் ஆஃப் வேர்ல்ட் ரிக்கார்ட்ஸில் உலகின் மிக நீண்ட நேரமாக எரியும் மின் விளக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவியல் அதிசயத்தை உலகெங்கும் மக்கள் வியப்புடன் பார்த்து வருகின்றனர்
இதையும் படிங்க: தண்ணீருக்குள் சிறுவன் எடுத்த புகைப்படம்: 27 ஆண்டு கால வழக்குக்கு உதவிய விநோதம்!