உலகளவில் பிரபலமான பேஸ்புக் செயலியை, கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கணக்குகளை வைத்துக்கொண்டு புகைப்படங்களை பதிவேற்றம் செய்வது, மற்றவர்களின் போட்டாஸூக்கு ஹார்டின் விட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்தாண்டு பயனர்களால் அதிக பேசப்பட்ட முக்கிய நிகழ்வுகளின் பட்டியலை பேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், கமலா ஹாரிஸ் முதல் ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணம் வரை இடம் பெற்றிருந்தது.
அமெரிக்க பேஸ்கட் பால் வீரரான கோபி பிரையன்ட் உயிரிழப்பு தான் அதிகம் பேசப்பட்ட நிகழ்வு ஆகும். அதே போல், ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணத்திற்கு நீதிக்கேட்டு சுமார் ஏழரை மில்லயன் பதிவுகள் இடம்பெற்றிருந்தது.
இதற்கிடையில், அமெரிக்காவில், பேஸ்புக் லைவ் பார்வையாளர்களின் எண்ணிக்கை 50 விழுக்காடு உயர்ந்தது, பலர் உடற்பயிற்சி வகுப்புகளை பார்வையிட்டு வந்தனர்.
மேலும், சமீபத்தில் அமெரிக்காவின் துணை அதிபராக தேர்ந்தேடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸை குறிப்பிட்டு, சுமார் 10 மில்லியன் பதிவுகள் இடம்பெற்றிருந்தன.
ஆஸ்திரேலியா காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக உலகளவில் 1.3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்தாண்டின் மிகப்பெரிய பேஸ்புக் நிதி திரட்டலுக்கு பங்களித்துள்ளனர்.
அதன் மூலம், 35 மில்லியனுக்கும் அதிகமான தொகை திரட்டப்பட்டது. பல சமூக பிரச்னைகளுக்காக பேஸ்புக் நிதி திரட்டலில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.