ETV Bharat / international

சீனாவுக்கு எதிராக நட்பு நாடுகளை ஒன்றிணைக்கும் பைடன்! - நட்பு நாடுகளை ஒன்றிணைக்கும் பைடன்

வாஷிங்டன்: சீனாவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை எடுக்கும் வகையில் நட்பு நாடுகளை இணைக்கும் முயற்சியில் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஜோ பைடன் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Biden
Biden
author img

By

Published : Nov 12, 2020, 7:29 PM IST

கடந்த பிப்ரவரி மாதம் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை கொள்ளைக்காரன் என ஜோ பைடன் விமர்சித்திருந்தார். இதற்கு நேர் எதிராக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவரை சிறந்த தலைவர் என புகழாரம் சூட்டினார். இதற்கிடையே, அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில், சீனாவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை எடுக்கும் வகையில் நட்பு நாடுகளை இணைக்கும் முயற்சியில் ஜோ பைடன் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து கனடா நாட்டு பத்திரிகையாளர் டேர்ரி கிளாவின் குறிப்பிடுகையில், "சீன உய்குர் இஸ்லாமியர்களை கைது செய்து அவர்களின் கலாசாரத்தை அழிக்க நினைக்கும் செயலை இனப்படுகொலை என பைடன் விமர்சித்துள்ளார். இதற்கு நேர் மாறாக, இரு நாடுகளுக்கிடையேயான வணிகத்தை மேம்படுத்தும் விதமாக ஹாங்காங்கில் சீனாவால் நிகழ்த்தப்படும் அத்து மீறல்களுக்கு சீனா பொறுப்பல்ல என ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

அது மட்டுமின்றி, ஜி ஜின்பிங்கும் தானும் நல்ல நண்பர்கள் எனவும் இருவருக்கிடையே நல்ல அன்பு இருப்பதாகவும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இதுவரை, ஜி ஜின்பிங்கின் செயல்களை உலகில் உள்ள அனைத்து ஜனநாயக நாடுகளும் ஒன்றிணைந்தே கண்டித்துள்ளன. ஹாங்காங்கில் நிகழ்த்தப்படும் அடக்குமுறை, சீன உய்குர் இஸ்லாமியர்கள் மீது மேற்கொள்ளப்படும் வன்முறைச் சம்பவங்கள், உலக வர்த்தக அமைப்பின் மீது வைக்கப்படும் விமர்சனம், தென்கிழக்குச் சீன பகுதியில் ஆக்கிரமிப்பு போன்ற பல்வேறு விவகாரங்கள் சீனாவுக்கு எதிராக உள்ளன.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்க சமூகம் பிளவுபட்டு இருக்கும்போதிலும் சீனாவை எதிர்க்கும்போது அது ஒன்றிணைய வாய்ப்பு உள்ளது" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.