பல்வேறுவிதமான வணிகத் தயாரிப்புகளை ஒப்பிடும் அமைப்புகளுக்கு உதவும் கம்பாரிசன் நிறுவனம், புதிய ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. அந்த ஆய்வின்படி, அமேசான் தலைமைச் செயல் அலுவலர் 2026ஆம் ஆண்டில் உலகின் முதல் டிரில்லியனராக இருப்பார் எனத் தெரியவந்துள்ளது.
அவர் சமீபத்தில் 38 பில்லியன் டாலர்களை இழந்தபோதிலும், உலகின் பணக்காரர் பட்டியலில் முதல் நபராகவே உள்ளார். அவரின் சொத்து மதிப்பு கடந்த ஐந்து ஆண்டுகளில் சராசரியாக 34 விழுக்காடு அதிகரித்துள்ளது.
டிரில்லியனர் பட்டியலில் சீன ரியல் எஸ்டேட் அதிபர் சூ ஜியாயின் 2027ஆம் ஆண்டிலும், இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி 2033ஆம் ஆண்டிலும், அலிபாபா நிறுவனத் தலைவர் ஜாக் மா 2030ஆம் ஆண்டிலும் இடம்பிடிப்பர் எனவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஆய்வு நிறுவனம், உலகளவில் பிரபலமான 25 நபர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களின் சமீபத்திய வளர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் ஆய்வு செய்தது. அதில், 11 நபர்களுக்கு மட்டுமே அவர்களின் வாழ்க்கையில் டிரில்லியனராக வாய்ப்பு உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க: 3 நிமிட வீடியோ காலில் 3,700 பேரை வேலையை விட்டுத் தூக்கிய ஊபர்!