இந்தியாவின் முக்கிய அண்டை நாடான மியான்மரில் கடந்த ஒன்றாம் தேதி முக்கிய அரசியல் மாற்றம் நிகழ்ந்தது. அந்நாட்டின் அரசை அதிரடியாக கைப்பற்றிய மியான்மர் ராணுவம், ஓராண்டு காலத்திற்கு ராணுவ ஆட்சியைப் பிரகடனப்படுத்தியது.
மேலும், அந்நாட்டின் முக்கியத் தலைவரான ஆங் சான் சூயி, அதிபர் வின் மின்ட் உள்ளிட்ட அரசுத் தலைவர்கள் அனைவரையும் ராணுவம் கைதுசெய்துள்ளது. தெற்காசியப் பிராந்தியத்தில் முக்கிய அரசியல் நிகழ்வாகக் கருதப்படும் நிலையில், இது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிலிங்கன், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தொலைபேசி மூலம் ஆலோசனை மேற்கொண்டனர்.
இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம், "இரு நாட்டு அமைச்சர்களும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பான சூழல் நிலவ அனைத்துவிதத்திலும் ஒத்துழைப்புத் தர உறுதிகொண்டுள்ளனர். அத்துடன் குவாட், கோவிட்-19, பருவநிலை மாற்றம் ஆகியவற்றிலும் இணைந்து செயல்படுவோம் எனத் தெரிவித்துள்ளனர்" எனக் கூறியது.
முன்னதாக, அமெரிக்காவின் புதிய அதிபராகப் பொறுப்பேற்றுக்கொண்ட ஜோ பைடன், பிரதமர் நரேந்திர மோடியிடம் தொலைபேசியில் உரையாடினார்.
இதையும் படிங்க: முகமது அலியை வென்ற குத்துச்சண்டை வீரர் லியோன் ஸ்பிங்க்ஸ் காலமானார்!