அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் மகளும், வெள்ளை மாளிகை உயர் அலுவலருமான இவாங்கா ட்ரம்ப் சமீபத்தில் வாஷிங்டன் வந்திருந்த ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டூட்டோனை நேரில் சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில், அந்த ஆஸ்திரேலிய அமைச்சருக்கு கோவிட்-19 (கொரோனா) தொற்று இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இந்தச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்த இவாங்கா, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டிலிருந்தபடி பணி செய்து வருகிறாராம்.
இதுதொடர்பாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜூட் தீரா பேசுகையில், "ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டூட்டோனுக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதை நாங்கள் அறிவோம். (இவாங்கா ட்ரம்ப்புடன்) அவர் சந்தித்துப் பேசுகையில் அவருக்கு வைரஸ் தொடர்பான எந்த அறிகுறியும் தென்படவில்லை.
இதையும் படிங்க : அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்தித்த நபருக்கு கொரோனா அறிகுறி!
அவர் எப்படி கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டார் என்பது குறித்து விசாரணை செய்து வருகிறோம். இவங்கா ட்ரம்ப்புக்கு வைரஸ் அறிகுறிகள் ஏதும் இல்லை என வெள்ளை மாளிகை மருத்துவக் குழு ஏற்கனவே தெரிவித்துவிட்டது. எனினும், அவர் இன்று வீட்டிலிருந்தபடி பணி செய்து வருகிறார்" என்றார்.
சீனாவில் தோன்றி உலகையே அச்சுறுத்தி வரும் கோவிட்-19 வைரஸ் காரணமாக அமெரிக்காவில் இதுவரை 2,300க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 50 பேர் உயிரிழந்துள்ளனர்.
கோவிட்-19 வைரஸின் தீவிரத்தை உணர்ந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அந்நாட்டில் சுகாதார அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார்.
இதையும் படிங்க : ரவான்டாவுக்கு கொரோனாவை கொண்டு சேர்த்த இந்தியர்