ETV Bharat / international

'ஒலிம்பிக்கை இன்னும் ஒருமுறை ஒத்திவைக்க முடியாது' - கோவிட்-19 ஒலிம்பிக்ஸ்

புருசெல்ஸ்: 2021ஆம் ஆண்டு ஒத்திவைக்கப்பட்டுள்ள ஒலிம்பிக் போட்டிகளை இன்னும் ஒருமுறை ஒத்திவைக்க முடியாது எனக் கூறப்பட்டுள்ளது.

OLYMPICS
OLYMPICS
author img

By

Published : Jun 7, 2020, 2:40 PM IST

கரோனா பெருந்தொற்று உலகைச் சூறையாடி வரும் வேளையில், டோக்கியோவில் இந்த ஆண்டு நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டு ஜூலை 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு, அது மக்கள் பயன்பாட்டிற்கு வர குறைந்து ஓரிரண்டு ஆண்டுகள் வரை ஆகும் என நிபுணர்கள் கூறுவதால், ஒலிம்பிக் போட்டி நடக்குமா என்ற சந்தேகம் எல்லோர் மத்தியிலும் எழுந்துள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து ஒரு செய்தித்தாள் ஒன்றிற்குப் பேட்டியளித்திருந்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் ஒருங்கிணைப்பு ஆணையத் தலைவர் பயீர் ஆலிவர் பெக்கரஸ்வியூஜான்ட், "2021ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி ஒலிம்பிக் நடக்கும் என அனைவரும் முழு நம்பிக்கையுடன் உள்ளனர். ஒருவேளை அப்படி நடக்காமல் போனால், ஒத்திவைக்க மாட்டோம் முழுவதுமாக ரத்து செய்துவிடுவோம். இதுபோன்ற பிரம்மாண்ட பொருள் செலவில் ஒருங்கிணைக்கப்படும், பல்லாயிரக்கணக்கானோரின் உழைப்பில் உருவாகும் திட்டத்தை நினைத்த நேரத்துக்கு நடத்திவிட முடியாது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க : நிறவெறிக்கு எதிராக வெள்ளை மாளிகை அருகே போராட்டம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.