ETV Bharat / international

கனடா பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்ற இந்திய வம்சாவளி பெண்

கனடா புதிய அமைச்சரவை விரிவாக்கத்தில் அனிதா ஆனந்த் என்ற இந்திய வம்சாவளிப் பெண்ணுக்கு பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது.

Anita Anand
Anita Anand
author img

By

Published : Oct 27, 2021, 3:53 PM IST

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் என்ற பெண் கனடாவின் பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது அமைச்சரவையில் மாற்றம் செய்துள்ள நிலையில், அனிதாவுக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பாதுகாப்புத்துறை அமைச்சராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹர்ஜித் சஜ்ஜன் என்பவர் பொறுப்பிலிருந்தார். அந்நாட்டு ராணுவத்தில் எழுந்த பாலியல் அத்துமீறல் பிரச்சனையை ஹர்ஜித் முறையாக கையாளவில்லை எனப் புகார் எழுந்தது.

இதையடுத்து ஹர்ஜித் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு, அனிதா நியமிக்கப்பட்டுள்ளார். தனக்கு இந்த வாய்ப்பை அளித்த பிரதமர் ட்ரூடோவுக்கு நன்றி எனவும், ராணுவத்தை பாதுகாப்பான ஆரோக்கியமான முறையில் இயக்க வழிவகை செய்வேன் என அனிதா கூறியுள்ளார்.

1967ஆம் ஆண்டு கனடாவில் பிறந்த அனிதாவின் தாயார் பஞ்சாப்பைச் சேர்ந்தவர், தந்தை ஆனந்த் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். கார்ப்பரேட் வழக்கறிஞரான இவர், கார்ப்பரேட் நிர்வாகத்தில் கைதேர்ந்தவராவார்.

2019ஆம் ஆண்டு தேர்தலில் லிபரல் கட்சி சார்பில் ஒக்வில்லே தொகுதியில் போட்டியிட்ட அனிதா 46 விழுக்காடு வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.

இதையும் படிங்க: காதல் திருமணம் - அரச பட்டத்தை துறந்த ஜப்பான் இளவரசி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.