இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவி ஆன்ரோஸ் ஜெரி. இசைவாத்தியங்களில் கைதேர்ந்தவரான இவர், அமெரிக்காவில் உள்ள நாட்ர டேம் பல்கலைக்கழகத்தில் படித்துவந்தார். இந்நிலையில், கடந்த செவ்வாய் கிழமை ( ஜனவரி 21ஆம் தேதி) முதல் மாணவி ஆன்ரோஸ் மாயமானதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் விசாரித்து வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அப்பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள ஏரியில் மாணவியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
ஆன்ரோஸ் ஜெரி ஏரிக்கு அருகே சென்றபோது அதில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
"என் வகுப்பில் மிகச் சிறந்த மாணவி அவள்தான்... அவளது மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது" என ஆன்ரோஸின் ஆசிரியரான ஃபிள் மெக்கவுன் தெரிவித்தார்.
இதையும் படிங்க : மறைந்தார் 'பிளாக் மாம்பா' - கண்ணீரில் ரசிகர்கள்!