ETV Bharat / international

இந்தோ - பசிபிக் கூட்டுறவு குறித்து இந்தியா, அமெரிக்கா பேச்சுவார்த்தை - வெளியுறவுத் துறை செயலர் ஹர்ஷ் வார்தன் சிரிங்லா

வாஷிங்டன்: இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துவரும் நிலையில், இந்தியா, அமெரிக்கா கூட்டுறவு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது .

author img

By

Published : Jul 8, 2020, 11:21 AM IST

இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் சுதந்திரம், வெளிப்படைத்தன்மை, அமைதி, வளர்ச்சி ஆகியவற்றை உறுதி செய்யும் நோக்குடன் இந்தியா - அமெரிக்கா நேற்று (ஜூலை 7) கூட்டுறவு பேச்சுவார்த்தை நடத்தியது. இரு நாட்டு வெளியுறவுத்துறையும் காணொலி மூலம் இந்தப் பேச்சுவார்த்தையை நடத்தியது.

இந்தியா சார்பில் வெளியுறவுத் துறை செயலர் ஹர்ஷ் வர்தன் சிரிங்லாவும் அமெரிக்கா சார்பில் அரசியல் விவகாரங்கள் துறை செயலர் டேவிட் ஹாலேவும் இந்த பேச்சுவார்தையில் பங்கேற்றனர். இதில் சர்வதேச அரசியல் சூழல், கடல்சார் பாதுகாப்பு, பன்னாட்டு கூட்டுறவு, கோவிட் - 19 பெருந்தொற்று பரவல் ஆகிய விவகாரங்கள் பேசப்பட்டன.

கரோனா பாதிப்பிலிருந்து மீள்வதற்கு இரு நாடுகளும் கூட்டாக செயல்படுவோம் என உறுதியளித்துள்ள நிலையில் தடுப்பூசி உள்ளிட்ட முக்கிய மருத்துவ தேவைகளை பகிர்ந்துகொள்ளவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துவரும் நிலையில், உலகின் மற்ற பெருஞ்சக்திகளான இந்தியா - அமெரிக்கா இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: WHO-விலிருந்து விலகுவது குறித்து ஐநாவுக்கு அமெரிக்கா நோட்டீஸ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.